மகனென் னாரே.” (நற்.290)
இதனுள் நீ இளமைச் செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த
பின்னர் உழுதுவிடு பகடு எச்சிலை அயின்றாற் போலப் பிறர்
அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்றெனவும், அவனொடு கூட்டம்
நெடுங்காலம் நிகழ்த்த வேண்டும் நீ அவள் அவனொடு
கட்டில்வரை எய்தியிருக்கின்றாளென்று ஊரார் கூறுகின்ற சொல்லை
என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே; கொள்வது நின்
இளமைக்கும் எழிற்கும் ஏலாதெனவும், அவனை வண்டென்பதன்றி
மகனென்னாராதலின் அவன் கடப்பாட்டாண்மை அதுவென்றுங்
கூறினாள்.
இனி “என்சொற்கொள்ளன்மாதோ” என்பதற்கு என் வார்த்தையைக்
கேட்டல் நினக்கு விருப்பமோ? விருப்பமாகில்யான்
கூறுகின் றதனைக் கொள்க எனவும் பொருள் கொள்க.
“ஈண்டுபெருந் தெய்வத் தியாண்டுபல கழிந்தெனப்
பார்த்துறைப் புணரி யலைத்தலிற் புடைகொண்டு
மூத்துவினை போகிய முரிவா யம்பி
நல்லெருது நடைவளம் வைத்தென வுழவர்
புல்லுடைக் காவில் தொழில்விட் டாங்கு
நறுவிரை நன்புகைக் கொடாஅர் சிறுவீ
ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல்
முழவுமுதற் பிணி்க்குந் துறைவ நன்றும்
விழுமிதிற் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறுநன் கறியா யாயின் எம்போல்
ஞெகிழ்தோட் கலுழ்ந்த கண்ணர்
மலர்தீய்ந் தனையர் நின்னயந் தோரே.” (நற்.315)
இதனுள் மூத்துவினை போகிய அம்பிபோலப் பருவஞ்சென்ற
பிணிக்கப்பட்ட எம்மைப்போலாது
இவள் இப்பருவத்தே இனைய
ளாகற்பாலளோ மலர்ந்த செவ்வியான் முறைவீயாய்க் கழியாது
இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப்போலவெனத் தலைவனுக்குக்
காமக்கிழத்தி கூறியவாறு காண்க.
(இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து பின்னர் வந்த
வாயிற்கண்ணும்) இன்நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து
-
கண்டோர்க்கெல்லாம் இன்பத்தைப் பயக்கும் புதல்வனை எடுத்துப்
பொலங்கலத்தாற் புனைந்துகொண்டு; பின்னர் வந்த வாயிற்கண்ணும் -
பல வாயில்களையும்
|