நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5447
Zoom In NormalZoom Out


 

போலத்
தோள்கந் தாகக் கூந்தலிற் பிணித்தவன்
மார்புகடி கொள்ளே னாயின் ஆர்வுற்
றிரந்தோர்க் கீயா தீட்டியோன் பொருள்போற்
பரந்து வெளிப்படா தாகி
வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே.”        (அகம்.276)

இதனுட் பரந்து வெளிப்படாதாகி வருந்துக  என்னலம் என்றமையிற்
சேரிப்பரத்தையைப்    புலந்து    கூறுதன்    முதலியனவுங்  கொள்க.
இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக. (10)

அகநகர்க்கட் புகுதற்குரிய வாயில்கள் கூற்று இவை எனல்

152. கற்புங் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலுஞ் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய.


இது,  விருந்து   முதலிய   வாயில்கள்    போலாது     அகநகர்க்கட்
புகுதற்குரிய வாயில்கள் கூற்று உணர்த்துகின்றது.

(இ-ள்.) கற்பும் - கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத
நல்லொழுக்கமும்;   காமமும்   -   அன்பும்;   நற்பால்   ஒழுக்கமும்
-  எவ்வாற்றானுந்  தங் குலத்திற்கு ஏற்றவாற்றான் ஒழுகும் ஒழுக்கமும்;
மெல் இயற்பொறையும் - வல்லென்ற நெஞ்சொடு பொறுக்கும் அவனைப்
போலாது ஒரு   தலையாக  மெல்லென்ற  நெஞ்சினராய்ப்  பொறுக்கும்
பொறையும்; நிறையும் -மறை புலப்படாமை நிறுக்கும் நெஞ்சுடைமையும்;
வல்லிதின் விருந்து  புறந்தருதலும்  - வறுமையுஞ் செல்வமுங் குறியாது
வல்லவாற்றான்  விருந்தினரைப்  பாதுகாத்து  அவர் மனமகிழ்வித்தலும்;
சுற்றம்    ஓம்பலும் -   கொண்டோன்  புரக்கும் நண்புடை மாந்தருஞ்
சுற்றத்தாருங் குஞ்சர முதலிய   காலேசங்களும்  பல  படை மாக்களும்
உள்ளிட்ட     சுற்றங்களைப்     பாதுகாத்து   அவை  உண்ட  பின்
உண்டலும்; அன்னபிறவும் கிழவோள்   மாண்புகள் -   அவை  போல்
வன  பிறவுமாகிய   தலைவியுடைய   மாட்சிமைகளை;     முகம்புகன்
முறைமையிற்     கிழவோற்கு    உரைத்தல்  -  அவன் முகம்புகுதும்
முறைமை     காரணத்தான்      தலைவற்குக்    கூறுதல்; அகம்புகன்
மரபின் வாயில்கட்கு   உரிய - அகநகர்க்கட்  புகுந்து  பழகி  அறிதன்
முறை