நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5452
Zoom In NormalZoom Out


 

ணர்.”                                    (குறுந்.19)

இது கற்பிற் புலந்தது.

“தீதிலேம் என்று தெளிப்பவுங் கைந்நீவி
யாதொன்று மெங்கண் மறுத்தரவு இல்லாயின்”     (கலி.81)

என்பது ஊடல். பிற இடத்தும் ஊடுதல் அறிந்து கொள்க.

“கலந்தநோய் கைம்மிகக் கண்படா என்வயின்
புலந்தாயும் நீயாயிற் பொய்யானே வெல்குவை.”   (கலி.46.)

என்பது குறிபிழைத்துழிப் புலந்தது.

“குணகடற் றிரையது பறைதபு நாரை.”         (குறுந்.128)

என்பதனுள்    நாரை   தெய்வங்  காக்கும்   அயிரை   இரையை
வேட்டாற்போல் நமக்கரியளாயினாளை நீ வேட்டா யென்பதனாற்  குறி
பிழைத்துழி    ஊடினமை   கூறிற்று.   பிறவும்   இவ்வாறு   வருவன
உய்த்துணர்ந்து கொள்க. (15)

தவைன் புலகுமிடத்துத் தோழிகூற்று நிகழ்த்துமெனல்

157. புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்துஞ்
சொலத்தகு கிளவி தோழிக் குரிய

இது,     முன்னர்த்,   தலைவன்  புலக்குமென்றார்,  அவ்விடத்துந்
தோழியே கூற்றுநிகழ்த்துதற்கு உரியளென்கிறது.

(இ-ள்.) புலத்தலும்   ஊடலும்   ஆகிய  இடத்தும்  -   தலைவன்
தலைவியையுந்    தோழியையும்  அச்சுறுத்தற்  செய்கையாகச்  செய்து
கொண்டு புலத்தலும்  அது   நீட்டித்து ஊடலும் உடன்     நிகழ்த்திய
வழியும்;   சொலத்தகு   கிளவி  தோழிக்கு  உரிய  -  சொல்லத்தகும்
பணிமொழி தோழிக்கு உரிய எ-று.

எனவே, தலைவி குறிப்பறிந்து தோழி  கூறுதலன்றித் தலைவி தானே
கூறப்பெறாளென்றவாறு. எனவே பாடாண்டிணைக்    கைக்கிளையாயின்
தலைவி கூறவும் பெறுமென்று கெள்க. உம்மை சிறப்பும்மை.

உ-ம்:

“தாயுயிர் வேண்டாக் கூருகி ரலவன்
நரிதின்று பரிக்கும் ஊர யாவதும்
அன்புமுதல் உறுத்த காதல்
இன்றெவன் பெற்றனை பைந்தொடி திறத்தே.”

“அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்”                (குறள்.1303)

என வரும்.

இவை கற்பில் தலைவி குறிப்பினான் தோழிகூற்று வந்தன.

“புலந்தாயு நீயாயிற் பொய்யானே வெல்குவை”

என்று களவில் தோழி கூறினாள், தலைவி குறிப்பினால்.

“கனைபெயல் நடு