நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5466
Zoom In NormalZoom Out


 

ளாகக்  கருதாது தன்னோடு ஒப்ப உயர்ந்தாளாகக் கொண்டொழுகுதல்
தனது  உயர்ச்சியாம்; செல்வன்   பணிமொழி   இயல்பு  ஆகலான -
தலைவன் இவ்வாறொழுகுகவென்று தமக்குப் பணித்த மொழி  நூலிலக்
கணத்தான் ஆன மொழியாகலான் எ-று.

ஈண்டு  ‘மகன்றா’ யென்றது பின்முறை யாக்கிய  வதுவை  யாளை.
இன்னும்   அவன்    சோர்பு   காத்தல்    தனக்குக்    கடனென்று
கூறப்படுதலானே    முன்முறையாக்கிய    வதுவையாளைத்   தம்மின்
உயர்ந்தாளென்றும் வழிபாடாற்றுதலும்   பின்முறை   வதுவையாளுக்கு
உயர்பாஞ் செல்வன் பணித்த மொழியானென்றவாறு. ஈண்டு  ‘மகன்றா’
யென்றது  உயர்ந்தாளை,   உய்த்துக்கொண்டுணர்தல்  (666)   என்னு
முத்தியான் இவையிரண்டும் பொருள்.‘செல்வ’னென்றார்,பன்மக்களையுந்
தன்னாணை  வழியிலே   இருத்துந் திருவுடைமை பற்றி. இவை வந்த
செய்யுள்கள் உய்த்துணர்க. (33)

பாசறைக்கண் தலைவியரொடும் போகான் எனல்

எண்ணரும்பாசறைப் பெண்ணொடு புணரார்.

இஃது  எய்தியது விலக்கிற்று; ‘முந்நீர்  வழக்கம்’  (தொல்.அகத்.34)
என்பதனாற்   பகைதணி    வினைக்குங்    காவற்குங்    கடும்பொடு
சேறலாமென்று எய்தியதனை விலக்கலின்.

(இ-ள்.) எண் அரும் பாசறை -  போர்   செய்து   வெல்லுமாற்றை
எண்ணும் அரிய பாசறையிடத்து; பெண்ணொடு புணரார்-தலைவியரொடு
தலைவனைக்கூட்டிப்புலநெறிவழக்கங் செய்யார் எ-று.

இரவும் பகலும் போர்ந்தொழின் மாறாமை தோன்ற அரும்  பாசறை
யென்றார்.

“நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.”
                              (பத்து.நெடுநல்.186,188)

எனவும்,

“ஒருகை பள்ளி யொற்றி யொருகை
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து”
                               (பத்து.முல்லை.75,76)

எனவும் வருவனவற்றான் அரிதாக உஞற்றியவாறு காண்க.

இனிக்  காவற்பிரிவுக்கு முறைசெய்து காப்பாற்றுதலை எண்ணுமெனப்
பொருளுரைக்க. (34)

அகப்புறத் தலைவற்குரிய விதி கூறல்

புறத்தோர் ஆங்கண் புரைவ தென்ப.
இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது.

(இ-ள்.)  புறத்தோர் ஆங்கண் - அடியோரும்  வினைவல  பாங்கி
னோருமாகிய அகப்புறத் த