நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5467
Zoom In NormalZoom Out


 

டைய பாசறையிடத் தாயின்; புரைவது என்ப - அவரைப் பெண்ணொடு
புணர்த்துப் புலனெறி வழக்கஞ் செய்தல் பொருந்துவது என்ற  கூறுவர்
ஆசிரியர் எ-று.

இப்பாசறைப்  பிரிவை வரையறுப்பவே  ஏனைப்    பிரிவுகளுக்குப்
புணர்த்தலும் புணராமையும் புறத்தோர்க்கு வரைவின்றாயிற்று. (35)

பார்ப்பார்க்குரிய கூற்று இவையெனல்

காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும்
கிழவோன் குறிப்பினை யெடுத்தனர் மொழிதலும்
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்
செலவுறு கிளவியும் செல்வழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய.

இது, பார்ப்பார்க்குரிய கிளவி கூறுகின்றது.

(இ-ள்.)  காமநிலை உரைத்தலும் - தலைவனது காமமிகுதி   கண்டு
இதன்நிலை இற்றென்று இழித்துக் கூறுவனவும்; தேர்நிலை உரைத்தலும்-
அங்ஙனங் கூறி அவன் தேருமாறு ஏதுவும்  எடுத்துக்காட்டுங்  கூறலும்;
கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும் -   தலைவன்   தாழ்ந்
தொழுகியவற்றை அவன் குறிப்பான் அறிந்து வெளிப்படுத்தி  அவற்கே
கூறுதலும்; ஆவொடுபட்ட நிமித்தம்  கூறலும்   -    வேள்விக்கபிலை
பாற்பயங்குன்றுதலானுங், குன்றாது கலநிறையப் பொழிதலானும் உளதாய
நிமித்தம் பற்றித் தலைவற்கு வரும் நன்மை தீமை கூறுதலும்;  செலவுறு
கிளவியும் - அவன் பிரியுங்கால் நன்னிமித்தம்பற்றிச் செலவு நன்றென்று
கூறுதலும்; செலவு அழுங்கு கிளவியும் - தீயநிமித்தம்பற்றிச்  செலவைத்
தவிர்த்துக்   கூறுதலும்; அன்ன பிறவும் -   அவைபோல்வன  பிறவும்;
பார்ப்பார்க்கு உரிய - அந்தணர்க்கு உரிய எ-று.

‘தேர்நிலை’ யென்றதனான் தேர்ந்து பின்னும் கலங்கினுங் கலங்காமல்
தெளிவுநிலை காட்டலுங் கொள்க. ‘அன்னபிறவும்’ என்றதனான். அறிவர்
இடித்துக் கூறியாங்குத்தாமும் இடித்துக் கூறுவனவும், வாயிலாகச் சென்று
கூறுவனவுந், தூதுசென்று கூறுவனவுங் கொள்க. ‘மொழிந்த பொருளோ
டொன்ற  அவ்வயின்  மொழியா ததனை முட்டின்று   முடிததல்’
(666)
என்பதனாற் களவியலிற் கூறாதனவும் ஈண்டே கூறினார்.  அஃது
இப்பேரறிவு உடையையாயின்  இனையை  யாகற்பாலை  யல்லையெனக்
காமநிலை யுரைத்தலுங் கற்பினுள்

“இல்லிருந்து மகிழ்வோற் கில்லையாற் புகழே”