நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5469
Zoom In NormalZoom Out


 

தமையின்.                                               (38)

தலைவி தலைவன்கண் தற்புகழ் கிளவி முற்கூறிய

இரண்டிடத்தல்லது கூறாள் எனல்

தற்புகழ் கிளவி கிழவன்முன் கிளத்தல்
எத்திறத் தானுங் கிழத்திக் கில்லை
முற்பட வகுத்த இரண்டலங் கடையே.

இது, தலைவியிலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.) தற்புகழ்  கிளவி  கிழவன்முன்  கிளத்தல்  -    தன்னைப்
புகழ்ந்துரைத்தலைக் கிழவன் முன்னர்ச்   சொல்லுதல் ; எத்திறத்தானுங்
கிழத்திக்கு இல்லை - நனிமிகு   சீற்றத்துனியினும் தலைவிக்கு இல்லை.
முற்பட  வகுத்த   இரண்டலங்கடையே  -  முன்பு   கூறுபடுத்தோதிய ‘தாய்போற்  கழறித்  தழீஇக் கோடலும்’ (173) ‘அவன்  சோர்புகாத்தற்கு
மகன்றா யுயர்பு தன்னுயர் பாதலும்’ (174)  அல்லாதவிடத்து எ-று.

கிழத்திக்கில்லையென    முடிக்க.     அவ்விரண்டிடத்துந்   தனது
குணச்சிறப்பைக்  குறிப்பான்    தலைவன்முன்னே    புகழ்வாள்போல
ஒழுகினாளென் றுணர்க.

இனி ‘முற்படவகுத்த இரண்டு’  என்பதற்கு ‘இரத்தலுந் தெளித்தலும்’
(தொல்.அகத்.41)   என    அகத்திணையியலுட்   கூறியனவென்றுமாம்.
தலைவன்      முன்னர்     இல்லையெனவே    அவன்    முன்னர்
அல்லாதவிடத்துப்   புகழ்தல்  பெற்றாம்.  அவை   காமக்கிழத்தியரும்
அவர்க்குப் பாங்காயினாருங் கேட்பப் புகழ்தலாம்.

உ-ம்:

“பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும்
என்னொடு புரையுந ளல்லள்
தன்னொடு புரையுநர்த் தானறி குநளே.

எனப் பதிற்றுப்பத்தில் வந்தது.                              (39)

தலைவன் தன்னைப் புகழுிமிட மிதுவெனல்

கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி
கிழவோன் வினைவயின் உரிய என்ப.

இது,   தலைவன்  தன்னைப்   புகழ்ந்துரைக்கும்  இடம்  இன்னுழி
என்கின்றது.

(இ-ள்.) கிழவி முன்னர்க் கிழவோன்  தற்புகழ் கிளவி  -  தலைவி
முன்னர்த்   தலைவன்  தன்னைப்  புகழ்ந்து கூறுங்கூற்று; வினைவயின்
உரிய என்ப - காரியங்களை  நிகழ்த்துங் காரணத்திடத்து உரியவென்று
கூறுவார் ஆசிரியர் எ-று.

அக்காரணமாவன,  கல்வியுங்,   கொடையும்,   பொருள்  செயலும்,
முற்றகப்பட்டோனை       முற்றுவிடுத்தலுமாகிய         காரியகளை
நிகழ்த்துவலெனக்   கூறுவன.   இவ்   வாள்வினைச்  சிறப்பை  யான்
எய்துவலெனத் தன்னைப் புகழவே அதுபற்றித் தலைவி பிரிவாற்றுதல் பயனாயிற்று.

“இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை யிளிவென”   (கலி.2)

என்றவழி யான் இளி