இது, பரத்தையிற்
பிரிவின்கண் தலைவற்குந் தலைவிக்கும்
உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
பரத்தையிற் பிரிந்த காலை யான -
பரத்தையிற் பிரிந்த
காலத்தின்க ணுண்டான ; பூப்பின் நீத்து -
இருதுக்காலத்தின்கட் சொற் கேட்கும்
அணுமைக்கண் நீங்கியிருந்து ;
புறப்பாடு ஈராறு நாளும்
அகன்று உறையார் என்மனார் புலவர் -
அவ் விருதுக்காலத்தின்
புறக்கூறாகிய பன்னிரண்டு நாளும்
இருவரும் பிரிந்துறையாரென்று
கூறுவர் புலவர் எ-று.
என்றது பூப்புத்
தோன்றிய மூன்றுநாளுங்
கூட்டமின்றி
அணுகவிருந்து அதன் பின்னர்ப்
பன்னிரண்டு நாளுங் கூடியுறைப
என்றதாம்.
தலைவியுந் தலைவனுந் தனித்தும்
இருத்தலிற் ‘பிரித்துறையா’
ரெனப் பன்மையாற் கூறினார்.
இனிப், பூப்பின் முன்னாறுநாளும் பின்னாறு
நாளுமென்றும், பூப்புத்
தோன்றிய நாள் முதலாகப்
பன்னிரண்டு நாளுமென்றும்,
நீத்தல்
தலைவன்மேல் ஏற்றியும்,
அகறலைத் தலைவிமேல்
ஏற்றியும்
உரைப்பாருமுளர். பரத்தையிற் பிரிந்த
காலத்துண்டான பூப்பெனவே,
தலைவி சேடியர் செய்ய கோலங்கொண்டு பரத்தையர்
மனைக்கட்சென்று தலைவற்குப் பூப்புணர்த்துதலுங்
கொள்க. இது,
“அரத்தம் உடீஇ யணிபழுப்புப் பூசிச்
சிரத்தையாற் செங்கழுநீர் சூட்டிப்-பரத்தை
நினைநோக்கிக் கூறினு நீமொழியல் என்று
மனைநோக்கி மாண விடும்.”
(திணை.நூற்.144)
தோழி செவ்வணியணிந்து
விட்டமை தலைவன் பாங்காயினார்
கூறியது.
இக்காலத்தின்கண் வேறுபாடாக
வருவனவெல்லாம் ஈண்டு
அடக்கிக் கொள்க.
பூப்புப்புறப்பட்ட ஞான்றும்
மற்றைநாளுங் கருத்தங்கின் அது
வயிற்றில் அழிதலும், மூன்றாநாள் தங்கின் அது
சில் வாழ்க்கைத்தாகலும்
பற்றி முந்நாளுங்
கூட்டமின்றென்றார்.
கூட்டமின்றியும்
நீங்காதிருத்தலிற்
பரத்தையிற் பிரிந்தானெனத்
தலைவி
நெஞ்சத்துக்கொண்ட வருத்தம்
அகலும். அகல வாய்க்குங் கரு
மாட்சிமைப்படுமாயிற்று. இது
மகப்பேற்றுக் காலத்திற்குரிய நிலைமை
கூறிற்று. இதனாற் பர
|