நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5476
Zoom In NormalZoom Out


 

னும் பகையுளதாங்கொ லென்று உட்கொண்டு காத்தலின்.         (48)

ஏனைப்பிரிவுகளுக்குக் காலவரையறை இதுவெனல்

190. ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையும்

இஃது, எஞ்சிய பிரிவிற்கு வரையறை கூறுகின்றது.

(இ-ள்.)  ஏனைப்  பிரிவும்  அவ்வயின்  நிலையும் - கழிந்து நின்ற
தூதிற்கும்   பொருளிற்கும்  பிரிந்து மீளும்  எல்லையும் யாண்டினதகம்
(எ-று.)

உ-ம் :

“மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல்
பாடுலந் தன்றே பறைக்குரல் எழிலி
புதன்மிசைத் தளவின் இதன்முட் செந்நனை
நெடுங்குலைப் பிடவமோ டொருங்குபிணி யவிழக்
காடே கம்மென்றன்றே யவல
கோடுடைந் தன்ன கோடற் பைம்பயிர்ப்
பதவின் பாவை முனைஇ மதவுநடை
யண்ண னல்லே றமர்பிணை தழீஇத்
தண்ணறல் பருகித் தாழ்ந்துபட் டனவே
யனையகொல் வாழி தோழி மனைய
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவன் மாச்சினை காட்டி
அவ்வள வென்றார் ஆண்டுச்செய் பொருளே.”   (அகம்.23)

இது பொருட்பிரிவின்கட் கார்குறித்து ஆறு திங்கள் இடையிட்டது.

“நெஞ்சு நடுக்குற” (கலி.24) என்னும்  பாலைக்கலியுள் “நடுநின்று
செய்பொருண்    முற்றுமள   வென்றார்”  என்றலின்   எத்துணையும்
அணித்தாக  மீள்வலென்றதாம். இவற்றிற்குப் பேரெல்லைவந்த செய்யுள்
வந்துழிக் காண்க.
                                         (49)

தலைவன் முதலியோர்க்குரிய மரபு கூறல்

191. யாறுங் குளனுங் காவும் ஆடிப்
பதியிகந்து நுகர்தலும் உரிய வென்ப

இது,     தலைவற்குங்      காமக்கிழத்தியர்க்குந்  தலைவியர்க்கும்
உரியதொரு மரபு கூறுகின்றது.

(இ-ள்.)யாறும்குளனும் காவும் ஆடி - காவிரியுந்  தண்பொருனையும்
ஆன்பொருனையும்   வையையும்   போலும்   யாற்றிலும்,  இருகாமத்
திணையேரி   (பட்டினப்.39)   போலுங்   குளங்களிலுந்,   திருமருதந்
துறைக்காவே (கலி.25) போலுங்  காக்களிலும்விளையாடி  ; பதி  இகந்து
நுகர்தலும்    உரிய    என்ப   -   உறைபதியைக்     கடந்துபோய்
நுகர்ச்சியெய்துதலுந் தலைவற்குங் காமக்கிழத்தியர்க்குந் தலைவியர்க்கும்
உரிய எ-று.

ஏற்புழிக்கோடலால், தலைவியர்க்குச் சிறுபான்மையென்றுணர்க.

“கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையிற் கதழ்வுநெறி தந்த
சிறையழி புதுப்புனல் ஆடு