195. இசைதிரிந் திசைப்பினும் இயையுமன் பொருளே
அசைதிரிந் தியலா என்மனார் புலவர்.
இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையிற்
பொருளிய
லென்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஓத்துக்களும்
பொருளதிலக்கண
மன்றே உணர்த்தின, இதற்கிது பெயராயவா றென்னை யெனின் ;
சொல்லதிகாரத்திற் கூறிய
சொற்களை மரபியலின் இருதிணை
ஐம்பாலியனெறி வழாமைத்
திரிபில் சொல்லென்பாராதலின்
அவை ஈண்டுத் தம்
பொருளை வேறுபட்டிசைப்பினும்
பொருளாமெனவும், இப்
பொருளதிகாரத்து முன்னர்க்கூறிய
பொருள்களிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைத்துச்,
சொல்லுணர்த்தும்
பொருளுந் தொடர்
மொழியுணர்த்தும்
பொருளும்ஒருங்கே கூறலிற் பொருளிய
லென்றார். இச் சூத்திரம்
இவ்வோத்தின்கண் அமைக்கின்ற
வழுவமைதிகளெல்லாஞ்
சொற்பொருளின் வழுவமைதியும்
பொருளின் வழுவமைதியுமென
இருவகைய என்கின்றது.
(இ-ள்)
இசை திரிந்து இசைப்பினும் - சொற்கள்
தத்தம் பொரு
ளுணர்த்தாது
வேறுபட்டிசைப்பினும் ; அசை திரிந்து இயலா
இசைப்பினும் - இவ்வதிகாரத்துள் யாத்த
பொருள்கள் நாடக வழக்கும்
உலகியல் வழக்குமாகிய புலனெறி வழக்கிற் றிரிந்து
இயன்றிசைப்பினும்;
மன் பொருள் இயையும் என்மனார்
புலவர் - அவை மிகவும்
பொருளேயாய்ப் பொருந்து மென்று
தொல்லாசிரியர் கூறுவர் எ-று.
அதனால் யானும் அவ்வாறு கூறுவலென்றார்.
சொல்லாவது எழுத்தினான் ஆக்கப்பட்டுப்
பொருளறி வுறுக்கும்
ஓசையாதலின் அதனை இசையென்றார்
; இ ஃது ஆகுபெயர்.
அசைக்கப் பட்டது - அசையென்பதும் ஆகுபெயர். ‘நோயுமின்பமும்’
(தொல்.பொ.196) என்பதனுள் ‘இருபெயர்
மூன்று முரியவாக’
என்பதனான் திணை மயங்குமென்றும், ‘உண்டற்குரிய
வல்லாப் பொருளை’ (தொல்.பொ.213)
என்றும் பிறாண்டுஞ் சொல் வேறுபட்டுப்
பொருளுணர்த்துதலும், இறைச்சிப் பொருண் முதலியன
|