நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5482
Zoom In NormalZoom Out


 

நாடக  வழக்கின் வழீஇயவாறுந், தேரும் யானையும்’   (தொல்.பொ.212)
‘அறக்கழிவுடையன’ (தொல்.பொ.218) ‘தாயத்தி னடையா’  (தொ.பொ.221)
என்னுஞ் சூத்திர  முதலியன  உலகியல்வழக்கின்  வழீஇயவாறுங்  கூறி,
அவ்வழு அமைக்கின்றவாறு  மேலே   காண்க.   புறத்திணை  யியலுட்
புறத்திணை   வழுக்கூறி     அகப்பொருட்குரிய    வழுவே  ஈண்டுக்
கூறுகின்றதென்றுணர்க.

‘இயலா’ என்றதனான் ‘என்செய்வா’ மென்றவழி’ ப் ‘பொன் செய்வா’
மென்றாற்போல     வினாவிற்     பயவாது    இறைபயந்தாற்  போல
நிற்பனவுங்கொள்க.     இன்னும்     அதனானே     செய்யுளிடத்துச்
சொற்பொருளானன்றித்     தொடர்பொருளாற்     பொருள் வேறுபட
இசைத்தலுங்கொள்க.  அது   சூத்திரத்துஞ்   செய்யுளுள்ளும் பொருள்
கூறுமாற்றானுணர்க.                                         (1)

முற்கூறிய இருவகையானும் பொருள் வேறுபட்டு

வழீ இயமையுமாறு கூறல்

196. நோயும் இன்பமும் இருவகை நிலையிற்
காமங் கண்ணிய மரபிடை தெரிய
எட்டன் பகுதியும் விளங்க வொட்டிய
உறுப்புடையதுபோ லுணர்வுடையதுபோல்
மறுத்துரைப்பதுபோல் நெஞ்சொடு புணர்த்துஞ்
சொல்லா மரபினவற்றொடு கெழீஇச்
செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும்
அவரவ ருறுபிணி தமபோலச் சேர்த்தியும்
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ
இருபெயர் மூன்றும் உரிய வாக
உவம வாயிற் படுத்தலும் உவமமோடு
ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி.

இது,  முற்கூறிய  இருவகையானும்  பொருள்வேறுபட்டு  வழீஇ
யமையுமாறு கூறுகின்றது.

(இ-ள்.)  நோயும் இன்பமும் இருவகை  நிலையிற் காமம் கண்ணிய
மரபிடை தெரிய துன்பமும்  இன்பமுமாகிய  இரண்டு நிலைக் களத்துங்
காமங்    கருதின   வரலாற்று  முறைமையிடம்   விளங்க  ; எட்டன்
பகுதியும்   விளங்க   -   நகை   முதலிய  மெய்ப்பாடு எட்டனுடைய
கூறுபாடுந்  தோன்ற ;   அறிவும்    புலனும்   வேறுபட  நிறீஇ  இரு
பெயர்  மூன்றும்  உரியவாக  -  மனவறிவும்  பொறியறிவும்  வேறுபட
நிறுத்தி  அஃறிணை  யிருபாற்கண்ணும்  உயர்திணை  மூன்றுபொருளு
முரியவாக ; அவரவர்  ஒட்டிய உறுப்புடையது போல்  உணர்வுடையது
போல்   மறுத்துரைப்பது     போல்    நெஞ்சொடு   புணர்த்தும்  -
கூறுகின்ற அவரவர் தமக்குப் பொரு