நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5483
Zoom In NormalZoom Out


 

ந்திய    உறுப்பெல்லாம் அதுவுடையது  போலவும் உணர்வு உடையது
போலவும் மறுமாற்றம் தருவது  போலவும்   தந்நெஞ்சொடு புணர்த்துச்
சொல்லியும்  ;   சொல்லாமரபினவற்றொடு    கெழீஇச்  செய்யாமரபிற்
றொழிற்படுத்து அடக்கியும் -  வார்த்தை சொல்லா  முறைமையுடையன
வாகிய  புள்ளும்   மாவும்  முதலியனவற்றோடே   அவை  வார்த்தை
கூறுவனவாகப்  பொருந்தி  அவை  செய்த   லாற்றாத முறைமையினை
யுடைய  தொழிலினை  அவற்றின்   மேலே    ஏற்றியும்  ;  உறுபிணி
தமபோலச் சேர்த்தியும் - அச்சொல்லா மரபினவை  உற்ற பிணிகளைத்
தம்   பிணிக்கு   வருந்தின   போலச்    சார்த்திக்கூறியும்  ; உவமம்
ஒன்றிடத்து  உவமவாயிற்   படுத்தலும் -  அம்மூவகைப்    பொருளை
உவமஞ்செய்தற்குப்   பொருந்து     மிடத்து   உவமத்தின்  வழியிலே
சார்த்திக்   கூறுதலும்   ;     இருவர்க்கும்    உரியபாற்   கிளவி  -
அத்தலைவர்க்குந்   தலைவியர்க்கு   முரிய இலக்கணத்திற் பக்கச்சொல்
எ-று.

தெரிய  விளங்க உரியவாகப்  புணர்த்தும்  அடக்கியுஞ்  சேர்த்தும்
அவற்றைப் படுத்தலும்  இவ்விருவர்க்குமுரிய  பாற்கிளவியென முடிக்க.
‘அவரவ’   ரென்கின்றார்    அகத்திணையியலுட்   பலராகக்   கூறிய
தலைவரையுந்   தலைவியரையும்.   ‘இருவ’  ரென்றதும் அவரென்னுஞ்
சுட்டு. நெஞ் சென்னும் அஃறிணை   யொருமையைத்  தெரியவிளங்கத்
தலைவன் கூறும்வழி உயர்திணையாண்பாலாகவுந்  தலைவி  கூறும்வழி
உயர்திணைப்     பெண்பாலாகவும்     பன்மையாற்     கூறும்வழிப்
பன்மைப்பாலாகவுங்   கொள்க.   என்றுஞ்சொல்லா  மரபினவற்றையும்
உயர்திணைப்   பாலாக்கியும்    அவற்றைத்   தமபோலச்   சேர்த்திக்
கூறுபடுத்து உயர்திணை  முப்பாலாக்கியுங் கூறுபவென வழுவமைத்தார்.
இருவகை    நிலைக்களத்து   எட்டனையுஞ்   சேர்க்கப்  பதினாறாம்.
அவற்றை நெஞ்சொடு சேர்க்கப் பலவாமென்றுணர்க.

“உண்ணாமையின்” என்னும் (123) அகப்பாட்டினுள்,

“இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கடல் ஓதம் போல