நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5484
Zoom In NormalZoom Out


 

ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே.”

என்றவழி   “அழிதக  வுடைமதி  வாழிய  நெஞ்சே”  என்றதனான்
நிலையின்றாகுதியென   நெஞ்சினை   உறுப்புடையது   போலக்  கழறி
நன்குரைத்தவாறும்     ஓதத்தையும்   நெஞ்சையும்  உயர்திணையாக்கி
உவமவாயிற்படுத்தவாறுங் காண்க.

“கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்
பிடிக்கை அன்ன பின்னகந் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாள்நுதல்
அந்தீங் கிளவிக் குறுமகள்
மென்றோள் பெறல்நசைஇச் சென்றஎன் நெஞ்சே.” (அகம்.9)

இஃது, உறுப்புடையதுபோல் உவந்துரைத்தது.

“அன்றவ ணொழிந்தன்று மிலையே”

என்னும் (19) அகப்பாட்டினுள்,

“வருந்தினை வாழியென் நெஞ்சே பருந்திருந்
துயாவிளி பயிற்றும் யாவுயர் நனந்தலை
உருள்துடி மகுளியின் பொருள்தெரிந் திசைக்கும்
கடுங்குர ற்குடிஞைய நெடும்பெருங் குன்றம்
எம்மொ டிறத்தலும் செல்லாய் பின்னின்று
ஒழியச் சூழ்ந்தனை யாயின் தவிராது
செல்லினிச் சிறக்கநின் னுள்ளம்.”

என அறிவுடையதுபோல் அழுகைபற்றிக் கூறிற்று.

“பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழிய நெஞ்சே.”                  (குறுந்.19)

என்றது உணர்வுடையதுபோல் வெகுளிபற்றிக் கூறிற்று.

“... ... ... ... ... ... ... ...
உள்ளம் பிணிக்கொண் டோள்வயி னெஞ்சஞ்
செல்லல் தீர்க்கஞ் செல்வா மென்னும்
செய்வினை முடியா தெவ்வஞ் செய்தல்
எய்யா மையோ டிளிவுதலைத் தருமென
உறுதி தூக்கந் தூங்கி அறிவே
சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறேந்து மருப்பின் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல்லென் வருந்திய உடம்பே.”         (நற்.234)

இஃது, உணர்வுடையதுபோல இளிவரல் பற்றிக் கூறியது.

“ஈதலுந் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி யவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே.”      (குறுந்.63)

இது, மறுத்துரைப்பதுபோல நெஞ்சினை இளிவரல்பற்றிக் கூறியது.

“பின்னின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வமென் களைமா”  (அகம்.3)

என்பதும் அது.

“விசும்புற நிவந்த” (அகம்.131) என்பதனுள்,

“வருக வென்னுதி யாயின்
வாரேன் நெஞ்சம் வாய்க்கநின் வினையே.”

என்பது,     மறுத்துரைப்பதுபோற்    றறுகண்மைபற்றிய   பெருமிதங்
கூறிற்று.  ஏனை  அச்சமும்  மருட்கையும்   பற்றியன தலைவன் கூற்று
வந்துழிக் காண்க. இவை நெஞ்சை ஆண்பாலாகக் கூறியன.

“மன்றுபாடவிந்து” (அகம்.128) என்பதனுள் “நெஞ்சம்...   தளரடி
தாங்கிய சென்ற தின்றே” என்பது உறுப்புடையது போல் அழுகைபற்றிக்
கூறியது.

“குறுநிலைக்  குரவின்”   (நற்.56)  என்பது  உறுப்பும்  உணர்வு
முடையதுபோல இளிவரல்பற்றிக் கூறியது.

“அறியவும் பெற்றாயோ வறியாயோ மடநெஞ்சே.”   (கலி.123)

இஃது, உணர்வுடையதுபோல் நகைபற்றிக் கூறியது.

“கோடொழி லகலல்குற் கொடியன்னார் முலைமூழ்கிப்