நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5485
Zoom In NormalZoom Out


 

த்துரைப்பதுபோல் உவகைபற்றிக் கூறியது.

“அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே
நீயெமக் காகா தது.”                      (குறள்.1291)

இஃது, இளிவரல் பற்றி மறுத்துக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க.
இவை நெஞ்சினைத் தலைவி பெண்பாலாகக் கூறியன. இவை துன்பமும்
இன்பமும் நிலைக்களமாகக் காமங் கண்ணிய மரபிடைத் தெரிய வந்தன.

“கானலுங் கழறாது கழியுங் கூறாது
தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது
ஒருநீ அல்லது பிறிதுயாதும் இலனே
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்
கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத்
தண்தா தூதிய வண்டினம் களிசிறந்து
பறைஇ தளரும் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ.”              (அகம்.170)

இது  சொல்லா மரபின சொல்லுவனவாக அழுகைபற்றிக் கூறியது.
இவை உயர்திணையுமாயிற்று.

“கொங்குதேர் வாழ்க்கை....”                     (குறுந்.2)

என்பது உவகைபற்றிக் கூறியது.

“போர்தொலைந் திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போல்
ஆரஞ ருற்றாரை யணங்கிய வந்தாயோ.”        (கலி.120)

இது,  செய்கையில்லாத   மாலைப்பொழுதினைச்  செய்யா  மரபின்
தொழிற்படுத் தடக்கி உவமவாயிற்படுத்தது.

“தொல்லூழி தடுமாறி” (கலி.129) என்பதனுள்,

“பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்
தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்திறம்
நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக்
காதல்செய் தகன்றாரை யுடையையோநீ ;
மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில்
நன்றறை கொன்றனர் அவரெனக் கலங்கிய
என்துயர் அறிந்தனை நரறியோ எம்போல
இன்றுணைப் பிரிந்தாரை யுடையையோ நீ ;
பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல்
இனிவரின் உயருமன், பழியெனக் கலங்கிய
தனியவர் இடும்பைகண் டினைதியோ எம்போல
இனியசெய் தகன்றாரை யுடையையோநீ ;”

எனக்     கடலும் அன்றிலுங் குழலும் உற்ற  பிணியைத் தம் பிணிக்கு
வருந்தினவாகச் சேர்த்தி உயர்திணையாக்கி  உவம  வாயிற்படுத்தவாறு
காண்க.

‘ஒன்றிடத்’     தென்றார்  வேண்டியவாறு   உவமங்கோட  லாகா
தென்றற்கு. பகுதியைப்   ‘பால்கெழு   கிளவி’   (தொல்.பொ.5)   என
மேலும்  ஆளுப. ‘காமங்கண்ணிய’     என்றதனாற்    கைக்கிளையும்
பெருந்திணையுமாகிய காமத்திற்கு வருவனவுங் கொள்க.

“சென்றதுகொல் போந்ததுகொல் செல்வி பெறுந்துணையும்
நின்றதுகொ னேர்மருங்கிற் கையூன்றி - முன்றின்
முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்
குழந்துபின் சென்றவென் னெஞ்சு”.          (முத்தொள்.)

இது,    கைக்கிளைக்கண்    உறுப்புடையதுபோல்    அவலம்பற்றி
நெஞ்சினைக் கூறியது.

“ஓங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லுங்
காந்தட் கிவருங் கருவிளம் பூக்கொள்ளும்
மாந்தளிர்க் கையில் தடவரும் மாமயில்
பூம்பொழில் நோக்கிப் புகுவனபின் செல்லும்
தோளெனச் சென்று துளங்கொளி வேய்தொடும்
நீள்கதுப் பிஃதென நீரறல் உட்புகும்
வாளொளி முல்லை முகையை முறுவலென்
றாள்வலி மிக்கான் அஃதறி கல்லான்”

என்றாற்போல் உயர்திணையாக உவமவாயிற்படு