நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5493
Zoom In NormalZoom Out


 

னிய மேவரக் கிளந்தெம்
ஐம்பால் ஆய்கவின் ஏத்தி யொண்தொடி
அசைமென் சாயல் அவ்வாங் குந்தி
மடமதர் மழைக்கண் இளையீர் இறந்த
கெடுதியும் உடையேன் என்றனன்”     (குறிஞ்சிப்.130-142)

என நாய் காத்தவாறும்,

“கணைவிடு புடையூக் கானங் கல்லென
மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக்
கார்ப்பெயல் உருமிற் பிளிறிச் சீர்த்தக
இரும்பிணர்த் தடக்கை இருநிலஞ் சேர்த்திச்
சினந்திகழ் கடாஅஞ் செருக்கிமரங் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர
உய்விடம் அறியே மாகி யொய்யெனத்
திருந்துகோல் எல்வளை தெளிர்ப்ப நாணுமறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச்
சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோல்
உடுவுறு பகழி வாங்கிக் கடுவிசை
அண்ணல் யானை அணிமுகத் தழுத்தலிற்
புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப்
புள்ளி வரிநுதல் சிதைய நில்லா
தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவேள்
அணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத்
திண்ணிலைக் கடம்பின் திரளரை வளைஇய
துணையறை மாலையிற் கைபிணி விடேஎம்
நுரையுடைக் கலுழி பாய்தலின் உரவுத்திரை
அருங்கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை
அஞ்சில் ஓதி யசையல் எனைய தூஉம்
அஞ்சல் ஓம்புநின் அணிநலங் காக்கென
மாசறு சுடர்நுதல் நீவி நீடுநினைந்
தென்முக நோக்கி நக்கனன்,,,,”        (குறிஞ்சிப்.160-183)

எனக் களிறு காத்தவாறும், புனலுள் எடுத்தவாறுங் காண்க.

“புலிபுலி யென்னும் பூசல் தோன்ற
,,,,நிற்றந் தோனே.”                        (அகம்.48)

இது, புலிகாத்தற்கு வந்தானென இட்டுரைத்தது.

“அன்னாய் வாழிவேண் டன்னை என்னை
தானு மலைந்தான் எமக்குந் தழையாயின
பொன்வீ மணியரும் பினவே
யென்ன மரங்கொலவர் சார லவ்வே.”        (ஐங்குறு.201)

இது, தோழி தழைதந்தானென அறத்தொடு நின்றது.

“சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை
அள்ளி அளகத்தின் மேலாய்ந்து-தெள்ளி
இத