தல்; மரீஇய மருங்கின் உரித்தென மொழிப - புலனெறி
வழக்கஞ்செய்து
மருவிப்போந்த கைக்கிளைப் பெருந்திணைக்கண் உரித்தென்று
கூறுவர்
ஆசிரியர் எ-று.
‘கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்’ (தொல்.அகத்.1) என
அவை இருமருங்கும் நிற்றலின் ஈண்டு மருங்கென்றார்.
“தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா
செய்வது நன்றாமோ மற்று.”
(கலி.62)
இஃது, அடியோர் தலைவராயவழித்
தலைவி வேட்கை
மறுத்துணர்த்தியது.
“எறித்த படைபோன் முடங்கி மடங்கி
நெறித்துவிட் டன்ன நிறையேரால் என்னைப்
பொறுக்கல்லா நோய்செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன்
நீநல்கின் உண்டென் னுயிர்”
(கலி.94)
“உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னின்
இழிந்ததோ கூனின் பிறப்பு.”
(கலி.94)
இவை, அடியோர் தலைவராக
வேட்கை மறுத்துணர்த்தியது.
பெருந்திணை.
ஏனை வினைவல பாங்கினோர்க்கு வந்துழிக் காண்க. இவை
கைகோளிரண்டன்கண்ணும் வழங்குதல்
சிறுபான்மையுரித்தென்று
அகத்திணைக்கட் கூறலின் வழுவமைத்தார். ‘ஒன்றென
முடித்த’லான்
மரீஇயவாறு ஏனையவற்றிற்குங் கொள்க.
“புள்ளிக் கள்வன் புனல்சேர் பொதுக்கம்போல்
வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயிறுற்றனவும்
ஒள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியும் நல்லார்
சிரறுபு சீறச் சிவந்தநின் மார்புந்
தவறாதல் சாலாவோ கூறு”
(கலி.88)
எனவும்,
“குதிரையோ வீறியது”
(கலி.96)
எனவும் வருவனவும் பிறவும் இழிந்தோர் கூற்றை உயர்ந்தோர் கூறுவன;
அவையும் அமைத்துக் கொள்க.
(17)
இது களவொழுக்கத்தின்கண் தேர் முதலியவற்றை ஊர்ந்துந்
தலைவன் செல்லுவன் எனல்
212. தேரும் யானையும் குதிரையும் பிறவும்
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப.
இது, களவொழுக்கத்துக்கு மறுதலையாயதொரு வழுவமைக்கின்றது.
(இ-ள்)
தேர் முதலியவற்றையும் பிற ஊர்திகளையும்
ஏறிச்சென்று
கூடுதலையும் உரியர் தலைவரென்று கூறுவர் புலவர் எ-று.
‘பிற’வாவன கோவேறுகழுதையுஞ் சிவிகையும்
முதலியனவாம்.
இது செல்வக் குறைபாடின்மை கூறுதலான் அமைந்தது.
“குறியின்றிப் பன்னாள்நின் கடுந்திண்டேர் வருபதங்கண்
டெறிதிரை யிமிழ்கானல் எதிர்கொண்டா ளென்பதோ
அறிவஞ ருழந்தேங்கி யாய்நலம் வறிதாகச்
செறிவளை தோளுர இவளைநீ துறந்ததை”
(கலி.127)
“நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே” (அகம்.20)
எனவும்,
“கடுமான் பரிய கதழ்பரி கடைஇ
நடுநாள் வரூஉம்”
(நற்.149)
எனவும்,
“கழிச்சுறா வெறிந்த புண்தாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெ
|