லிந் தசைஇ”
(அகம்.120)
எனவும் வரும்.
ஏனைய வந்துழிக் காண்க.
உம்மையான், இளையரொடு வந்து தனித்துக் கூடுதலுங் கொள்க.
“வல்வில் இளையரோ டெல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ”
(அகம்.120)
என்றாற்போல்வன கொள்க.
இதனானே உடன்போக்கிலும்,
“கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறி
கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய
வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக்
கூறுமின் வாழியோ ஆறுசென் மாக்கள்
நற்றோள் நயந்துபா ராட்டி
எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே”
(ஐங்குறு.385)
எனத் தேர் முதலிய ஏறிப்போதலுங் கொள்க.
(18)
இது ஒரு சொல்வழுவமைத்தல்
213. உண்டற் குரிய அல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலும் மரபே.
இது, சொல்வேறுபட்டுப் பொருளுணர்த்தும் வழுவமைக்கின்றது.
(இ-ள்.)
உண்டற்கு உரிய அல்லாப் பொருளை - உண்டற்றொழிலை
நிகழ்த்துதற்குரிய அல்லாத பொருளை ; உண்டன
போலக் கூறலும்
மரபே - அத்தொழிலை நிகழ்த்தினவாகப் புலனெறிவழக்கஞ்
செய்தலும்
மரபு எ-று.
அது,
“பசலையா லுணப்பட்டுப் பண்டைநீர் ஒழிந்தக்கால்”
(கலி.15)
என வரும்.
இதன்கட் சொல்வழுவன்றிச் செய்யா
மரபிற் றொழிற் படுத்து
அடக்கலும் அமைத்தார். இன்னும் உய்த்துக்கொண்டுணர்த (666)
லென்பதனான் உண்ணப்படுதற்குரிய அல்லாத பொருளதனைப்
பிறர் உண்ணப்பட்டதுபோலக் கூறலும் மரபாமென்பது பொருளாகக்
கொள்க. அவை,
“தோள்நல முண்டு துறக்கப் பட்டோர்
வேள்நீர் உண்ட குடையோ ரன்னர்;
நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோர்
அல்குநர் போகிய வூரோ ரன்னர்:
கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர்
சூடின ரிட்ட பூவோ ரன்னர்.”
(கலி.23)
என வரும். பிறவுங் கொள்க.
உம்மையாற் பிற தொழில்பற்றி வருவனவுங் கொள்க.
“கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று”
(குறள்.1244)
“புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு”
(குறள்.1187)
“வருத்தி வான்றோய் வற்றே காமம்”
(குறுந்.102)
என்றாற் போல்வனவுங் கொள்க.
(19)
வரைவு நேராமைக்குக் காரணம் பொருள்வேண்டி
எனத் தோழி கூறல்
214. பொருளென மொழிதலும் வரைநிலையின்றே
காப்புக் கைமிகுத லுண்மை யான.
இது களவின்கண் தோழிக் குரியதொரு வழுவமைக்கின்றது.
(இ-ள்.) பொருள்
என மொழிதலும் வரைநிலை இன்றே - எமர்
வரைவு நேராமைக்குக் காரணம்
|