பொருள் வேண்டியெனத் தோழி கூறலும் நீக்குநிலைமையின்று, காப்புக்
கைம்மிகுதல் உண்மையான - காவன் மிகுதியான் தலைவிக்கு வருத்தம்
கைகடத்த லுண்டாகையான் எ-று.
உம்மையாற் பொருளேயன்றி ஊருங் காடும் மலையும்
முதலியன
வேண்டுவரென்றலுங் கொள்க.
“சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான்றோய் வன்ன குடிமையும் நோக்கித்
திருமணி வரன்றுங் குன்றங் கொண்டிவள்
வருமுலை யாகம் வழங்கின் நன்றே
யஃதான்று,
அடைபொருள் கருதுவிர் ஆயிற் குடையொடு
கழுமலந் தந்த நற்றேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் வஞ்சியோ
டுள்ளி விழவின் உறந்தையுஞ் சிறிதே.”
(நற்.)
இதனுட் பொருள் விரும்பியவாறுங்
குன்றம் விரும்பியவாறுங்
காண்க. அடைபொருள் - இவள் நும்பால் அடைதற்குக் காரணமாகிய பொருளென்க.
(20)
மேலதற்கொரு புறனடை
215. அன்பே அறனே இன்பம் நாணொடு
துறந்த ஒழுக்கம் பழித்தன் றாகலின்
ஒன்றும் வேண்டா காப்பி னுள்ளே.
இது, தோழிபொருளென மொழிதற்குத் தலைவியும்
உடன்பட்டு
நிற்றற்குரிய ளென்றலின் மேலதற்கொரு புறனடை.
(இ-ள்.)
காப்பினுள் - காவன் மிகுதியான் தலைவிக்கு
வருத்தம்
நிகழ்ந்தவிடத்து; அன்பே அறனே இன்பம் நாணொடு துறந்த ஒழுக்கம்
- தலைவன்கண் நிகழும் அன்புங் குடிப்பிறந்தோர் ஒழுகும் அறனுந்
தமக் கின்றியமையா இன்பமும் நாணும் அகன்ற ஒழுகலாறு; பழித்தன்று
ஆகலின் ஒன்றும்
- பழியுடைத்தன்று
ஆகையினாலே
புலனெறிவழக்கிற்குப் பொருந்தும்
; வேண்டா - அவற்றை
வழுவாமென்று களையல் வேண்டா எ-று.
எனவே, பொருளென மொழிதல் தலைவிக்கும்
உடன்பாடென்று
அமைத்தாராயிற்று.
21)
தலைவன்பிரியக்கருதின் இவ்வாறுங் கூறுவரெனல்
216. சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே.
இது, தோழிக்குந் தலைவிக்கு முரியதொரு வழுவமைக்கின்றது.
(இ-ள்.) தலைவன் பிரியக் கருதியவழித் தோழியுந் தலைவியும் நீ
போ
|