“எல்லா விஃதொத்தன்” (கலி.61) என்பது பெண்பால் மேல் வந்தது. ஏனைய வந்துழிக் காண்க. பொதுச்சொல் லென்றதனானே எல்லா எலா எல்ல எலுவ எனவுங் கொள்க.
“எலுவ சிறாஅர்” (குறுந்.129) என வந்தது. “யாரை யெலுவ யாமே” (நற்.395) எனத் தலைவனைத் தோழி கூறினாள்.
எலுவியென்பது பாலுணர்த்தலின் ஆராயப்படாது.
(26)
தோழி தலைவியுறுப்பைத் தன்னுறுப்பாகவுங் கூறுவனெனல்
221. தாயத்தின் அடையா ஈயச் செல்லா
வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா
எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம்
அல்லா வாயினும் புல்லுவ உளவே.
இது, தோழி தலைவியுறுப்பினைத் தன்னுறுப்பாகக் கூறப் பெறுமென வழுவமைக்கின்றது.
(இ-ள்.)
தாயத்தின் அடையா - தந்தையுடைய பொருள்களாய் மக்களெய்துதற்குரிய பொருள்களிற் சேராதனவுமாய்; ஈயச் செல்லா - அறமும் புகழுங் கருதிக்கொடுப்பப் பிறர்பாற்
செல்லாதனவுமாய்; வினைவயின் தங்கா -
மைந்தரில்லாதார்க்கு மைந்தர் செய்வன செய்து பெறும் பொருளில் தங்காதனவுமாய்; வீற்றுக் கொளப்படா - வேறு பட்டானொருவன் வலிந்து கொள்ளப்படாதனவுமாய்; எம்மென வரூஉங் கிழமைத்
தோற்றம் - எம்முடையனவென்று தோழி கூறப் புலனெறி வழக்கிற்குப் பொருந்திவரும்
உரிமையை யுடைய உறுப்புக்கள்; அல்லாவாயினும் புல்லுவ உளவே - வழுவாயினும் பொருந்து வனவுள எ-று.
உறுப்புக் கட்புலனாதலின் தோற்றமென்றார். எனவே, உறுப்பொழிய இந்நான்கும் எம்மெனக் கூறலாகாவென்றார்.
“ஒருநாளென், தோள்நெகிழ் புற்ற துயரால் துணிதந்து”
(கலி.37)
எனவும்,
“என்தோள் எழுதிய தொய்யிலும்” (கலி.18)
எனவும் தலைவி தோளினை என்தோள் என்றாள்.
“தன்கால் அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்
வரிப்புனை பந்தொடு வைகிய செல்வோள்
இவைகாண் தோறும் நோவாம் மாதோ.” (நற்.12)
“நெய்தல் இதழுண்கண்,
நின்கண்ணா கென்கண் மன்” (கலி.39)
என்பனவும் இதன்கணடங்கும். ‘உள’ வென்றதனாற் சிறுபான்மை
தலைவி கூறுவனவுங்கொள்க. அவை,
“என்னொடும் நின்னொடுஞ் சூழாது” (அகம்.128)
எனவும்,
“நின்கண்ணாற் காண்பென்மன் யான்” (கலி.39)
எனவும் வரும்.
(27)
பால்வழுவமைத்தல்
222. ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும்வரு
|