வகை தானே வழக்கென மொழிப.
இஃது, ‘ஒன்றே வேறே’ (தொல்.பொ.93) என்னுஞ் சூத்திரத்து ‘ஒத்த கிழவனுங் கிழத்தியும்’ என்ற ஒருமை பன்மைப்பாலாய் உணர்த்
துகவென வழுவமைத்தது.
(இ-ள்.)
ஒருபாற் கிளவி - ‘ஒத்த கிழவனுங் கிழத்தியும்’ என்றவழி ஆணொருமையும் பெண்ணொருமையும் உணர்த்தி நின்ற சொற்களை ஆசிரியரும் அவ்வாறு ஆண்டாரேனும் அவ்வொருமைச் சொற்கள்; எனைப்பாற்கண்ணும் வருவகைதானே - நால்வகைக் குலத்துத்
தலைவரையந் தலைவியரையும் உணர்த்தும் பன்மைச் சொற்கண்ணே
நின்று பன்மைப் பொருள் உணர்த்திவருங் கூறுபாடு தானே; வழக்
கென மொழிப - உலக வழக்கென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று.
இதனாற் பயன்: உலகத்து ஓரூர்க்கண்ணும் ஒரோவொரு குலத்தின் கண்ணுந் தலைவருந் தலைவியரும் பலரேனும் அவர்களை யெல்லாங்
கூறுங்காற் கிழவனுங் கிழத்தியுமென்று ஒருமையாற் கூறுவதன்றி
வேறொரு வழக்கின்றென்பதுபற்றி முதனூலாசிரியர் அங்ஙனஞ்
சூத்திரஞ் செய்தலின். யானும் அவ்வாறே சூத்திரஞ் செய்
தேனாயினும், அச்சொற் பலரையும் உணர்த்துமென வழுவமைத்
தாராயிற்று. ஒருவனொடு பலர் கூட்டமுங் கோடற்கு ஏனைப்
பாலென்று ஒருமையாற் கூறாது ‘எனைப்பா’ லெனப் பன்மையாற்
கூறினார். இதனால் சொல்வழுவும் பொருள் வழுவும் அமைத்தார். ‘ஒத்த கிழவனுங் கிழத்தியும்’ (93) என்ற ஒருமையே கொள்ளின் அன்னாரிருவர் இவ்வுலகத்துள்ளாரன்றி வேறாக நாட்டிக் கொள்ளப்பட்டா
ரென்பதுபட்டு இஃது உலக வழக்கல்லாததொரு
நூலுமாய் ‘வழக்குஞ் செய்யுளும்’ (தொல்.பாயிரம்)
என்பதனொடு
மாறுகோட லேயன்றிப் ‘பரத்தை வாயினால்வர்க்கு முரித்தே’
(தொல்.பொ.224) என்றாற்போல்வன பிற சூத்திரங்களும் வேண்டாவாமென் றுணர்க.
(28)
எல்லாவுயிர்க்கும் இன்பமுரித்தெனல்
223. எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்.
இது, மேலதற்கொரு புறனடை.
(இ-ள்.)
இன்பம் என்பது தான் - அறனு
|