நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5509
Zoom In NormalZoom Out


 

வென்று   கொள்க.   உடன்போக்குக்    கருதுதலுந்   தலைவன்தான் வரையாமல் தலைவி விரும்புதலும் வழுவாய் அமைந்தன.         (31)

கற்பினுள் தோழிக்கும் அறிவர்க்குமுரிய

வழு அமைதி இவையெனல்

226. வருத்த மிகுதி சுட்டுங் காலை
உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்.

இது,  கற்புக்காலத்துத்  தோழிக்கும்  அறிவர்க்கும்     உரியதொரு
வழுவமைக்கின்றது.

(இ-ள்.) வருத்தமிகுதி சுட்டுங்காலை-தோழியும் அறிவரும் பரத்தயிற்
பிரிவான் தலைவர்க்குந் தலைவியர்க்குந் தோன்றிய வருத்த மிகுதியைத்
தீர்க்கக் கருதிக் கூற்று   நிகழ்த்துங்காலத்து;   வாழ்க்கையுள்  இரக்கம்
உரித்தென மொழிப-அவரது இல்வாழ்க்கை நிகழ்ச்சிக் கண்ணே  தமக்கு
வருத்தந்தோன்றிற்றாகக் கூறுதலும் உரித்தென்று கூறுவராசிரியர் எ-று.

“நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்குந்
தணந்தனை ஆயினெம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை யெந்தை யெம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில்
நடுங்கஞர் எவ்வங் களைந்த வெம்மே.”       (குறுந்.354)

இதனுள் ‘இல்லறத்தின் நீ துறந்தாயாயின் எம்மை எம் மூர்க்கண்ணே
விடுக’வெனத் தனக்கு வருத்தந் தோன்றிற்றாகத்  தோழி    கூறியவாறு
காண்க.

“உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந்
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு நின்றாய் நீயே யிஃதோ
ஓரா வல்சிச் சீரில் வாழ்க்கைப்
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே.”         (குறுந்.295)

இதனுள்  ஓரா “வல்சி” யொடு முன்னர் நிகழ்த்திய வாழ்க்கை இவன்
வந்தானாகப் புறத்து  விளையாடும்   விழவுள  தாயிற்றென்று.  இவ்வூர்
கூறாநிற்குஞ் செல்வம் இவளை ஞெகிழ்ந்தாற் பழைய தன்மையாமென்று
அறிவர் இரங்கிக் கூறியவாறு காண்க.

“துறைமீன் வழங்கும்”                      (அகம்.316)

என்பதனுள்,

“அதுபுலந் துறைதல் வல்லி யோரே”

எனப்    புலவியான்   நின்  இல்வாழ்க்கை குறைபடுமெனத் தோழி கூறியவாறு காண்க.

இன்னும்      உய்த்துக்கொண்டுணர்தலென்பதனான்    ஏனைப் பிரிவான் நிகழும்     வருத்தமிகுதியைக்     குறித்தவிடத்து    உயிர் வாழ்க்கையின் இரக்கமுரித்தென மொழிப என்றும் பொருள் கூறிச்,

“செல்லாமை யுண்டே லெனக்