கு உபகாரப்படும் பொருட்டாதலேயன்றி அக் கருப்பொருடன்னுள்ளே தோன்றும் பொருளும் உள; திறத்து இயல் மருங்கின் - அஃது உள்ளுறையுவமத்தின் கூற்றிலே அடங்குமாறுபோல நடக்குமிடத்து; தெரியுமோர்க்கு
- அவ்வுள்ளுறையுவமமன்று இஃது இறைச்சி யென்று ஆராய்ந்துணரும் நல்லறிவுடையோர்க்கு எ-று.
“கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்
தினைபிடி யுண்ணும் பெருங்கல் நாட
கெட்டிடத் துவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றி மறந்தனையா யாயின் மென்சீர்க்
கலிமயிற் கலாவத் தன்னவிவள்
ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே.” (குறுந்.225)
இதனுள் “தான் கெட்டவிடத்து உதவின உதவியை அரச
வுரிமையெய்திய மன்னன் மறந்தாற்போல நீ இரந்து துயருற்ற
காலத்து யான் தலைவியை நின்னொடு கூட்டிய செய்ந்நன்றியை
மறவாது இன்று நீ வரைந்து கொள்வையாயின் இவள் கூந்தல்
நினக்குரிய” வென்றவழி உவமையும்பொருளும் ஒத்து முடிந்தமையின்
முன்னின்ற நாடவென்பது உள்ளுறையுவமமன்றாய் இறைச்சியாம்.
என்னை? தன் கன்றிற்குப் பயன்பட்டுப் பிறர்க்குஉயிரைக்கொடுக்கின்ற
தினையைத் தான் உண்டு அழிவுசெய்கின்றாற் போல, நீ நின் கருமஞ்
சிதையாமற் பார்த்து எமக்குயிராகிய இவளைத்துயருறுத்தி எம்மை
இறந்துபடுவித்தல் ஆகாதென்று உவமை யெய்திற்றேனும், பின்னர் நின்ற
பொருளோடியையாது இவ்வுவமம் உள்ளுறையுற்றுப் பொருள்பயவாது
இறைச்சியாகிய நாடென்பதனுள்ளே வேறொரு பொருள் தோற்றுவித்து
நின்றதேயாமாதலின். முலைமாந்த என்றது தன் கருமஞ் சிதையாமற்
பார்த்தென்னுந் துணையன்றி உள்ளுறையுவமப் பொருளை
முற்ற உணர்த்தாமை யுணர்க.
“வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்
தேந்து மருப்பின் இனவண் டிமிர்பூதுஞ்
சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்
ஐவன வெண்ணெல் அறையுரலுட் பெய்திருவாம்
ஐயனை யேத்துவாம் போல அணிபெற்ற
மைபடு சென்னிப் பயமலை நாடனைத்
தையலாய் பாடுவாம் நாம்.” (கலி.43)
இதனுட் புலவுநாறியும் பூநாறியுந் தீதும் நன்றுமாகிய
|