நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5515
Zoom In NormalZoom Out


 

கூறி     -   தலைவி    வேறொரு    தலைவியுடைய    குணங்கள்
இத்தன்மையவென்று   தலைவற்குக்  கூறி;  கிழவோன்    குறிப்பினை
அறிதற்கும்  உரியள்   -   அவள்மாட்டு   இவன்    எத்தன்மையனா யிருக்கின்றானென்று தலைவன்  குறிப்பினை உணர்தற்குமுரியள் எ-று.

பரத்தை  யென்னாது  ‘பிறள்’  என்றதனான்  தலைவியே யாயிற்று;
அன்றிப்  பரத்தையாயின்  ஊடலின்மை  அறனன்   றாகலின் உள்ளத்
தூடல் நிகழ்தல் வேண்டும்.  தோழி  கூறுங்கால்  தலைவியரைக் கூறப்
பெறா  ளென்பதூஉம் பரத்தையரைக்  கூறின் அவர்க்கு முதுக்குறைமை
கூறிக் கூறுவளென்பதூஉங் கொள்க.

“கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே.”        (ஐங்குறு.122)

இது,    தலைவன்    வரையக்    கருதினாளொரு    தலைவியை
இனையளெனக்  கூறி  அவள்மாட்டு இவன்      எத்தன்மையனென்று
விதுப்    புற்றுக்   கூறியது.  இது தலைவன்  கூற  உணராது   தான்
வேறொன்று    கூறி     அவன்    குறிப்பு    அறியக்   கருதுதலின்
வழுவாயமைந்தது.       இது        கைக்கிளைப்      பொருட்கண்
வழுவமைக்கின்றது.                                        (40)

தலைவி மலிதலு மூடலுமல்லாதவிடத்துத்

தலைவன்முன் கழற்றுரை கூறாள் எனல்

235. தம்முறு விழுமம் பத்தையர் கூறினும்
மெய்ம்மை யாக அவர்வயி னுணர்ந்து
தலைத்தாட் கழறல்தம் எதிர்ப்பொழு தின்றே
மலிதலும் ஊடலும் அவையலங் கடையே.

இது, பரத்தையர்க்குந் தலைவிக்குந்    தலைவற்கும்    படுவதொரு
வழுவமைக்கின்றது.

(இ-ள்.) தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும் - தலைவனான் தாம்
உற்ற   வருத்தத்தைத்   தலைவிக்குப்  பரத்தையர்  கூறினும்  ஏனைத்
தலைவியர்   கூறினும்;    அவர்வயின்   மெய்ம்மையாக  உணர்ந்து -
அவர்   கூறியவாற்றானே   அவ்வருத்தத்தை அவரிடத்து உண்மையாக
உணர்ந்து;   தலைத்தாட்   கழறல்  -  தலைவன்  முன்நின்று  கழறுங்
கழற்றுரை: தம் எதிர்ப்பொழுது    இன்று  - தம்மைப்     பரத்தையர்
எதிர்ப்பட்ட   பொழுதின்கண்    இல்லை  ;   மலிதலும்   -  அவர்
துயருறநின்றுழிக்   கவலாது   நீங்கினானென   மகிழ்தலும் ;  ஊடலும்
-அவன்  பிரிவிற்கு  இவர் இரங் கினாரென்ற காரணத்தான் ஊடுதலும்;
அவை அலங்கடை - அவ்விரண் டும் நிகழா விடத்து எ-று.

என்பது வெறுத்த உள்ளத்தளாமென்பது கருத்து. எனவே,  மலிதலும்
ஊடலும்