சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   125
Zoom In NormalZoom Out


1 உயர்திணை என்மனார், மக்கட் சுட்டே;
அஃறிணை என்மனார், அவர் அல பிறவே;
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே.

2. ஆடூஉ அறி சொல் மகடூஉ அறி சொல்
பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி
அம் முப் பாற்சொல் உயர்திணையவ்வே.

3 ஒன்று அறி சொல்லே பல அறி சொல் என்று
ஆயிரு பாற் சொல் அஃறிணையவ்வே.

4 பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்,
தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்,
இவ் என அறியும் அந்தம் தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும்.

5 னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல்.

6 ளஃகான் ஒற்றே மகடூஉ அறி சொல்.

7 ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்,
மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
நேரத்தோன்றும் பலர் அறிசொல்லே.

8 ஒன்று அறி கிளவி த, ற, ட, ஊர்ந்த,
குன்றிய லுகரத்து இறுதி ஆகும்.

9 அ, ஆ, வ, என வரூஉம் இறுதி
அப்பால் மூன்றே பலஅறி சொல்லே.

10 இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய,
ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும்
தோற்றம் தாமே வினை