சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   126
Zoom In NormalZoom Out


யொடு வருமே.

11 வினையின் தோன்றும் பால்அறி கிளவியும்,
பெயரின் தோன்றும் பால்அறி கிளவியும்,
மயங்கல் கூடா; தம்மர பினவே.

12 ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி
ஆண்மை அறிசொற்கு ஆகு இடன் இன்றே .

13 செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்!.

14 வினாவும் செப்பே வினா எதிர் வரினே.

15 செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே,
அப் பொருள் புணர்ந்த கிளவியான.

16 செப்பினும் வினாவினும், சினை முதல் கிளவிக்கு,
அப்பொருள் ஆகும், உறழ்துணைப் பொருளே.

17 தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை இலவே .

18 இனச் சுட்டு இல்லாப் பண்பு கொள் பெயர்க் கொடை
வழக்கு ஆறு அல்ல செய்யுள் ஆறே.

19 இயற்கைப் பொருளை இற்று எனக் கிளத்தல்.

20 செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்!

21 ஆக்கம்தானே காரண முதற்றே.

22 ஆக்கக் கிளவி காரணம் இன்றியும்
போக்கு இன்று என்ப - வழக்கினுள்ளே .