சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   127
Zoom In NormalZoom Out


23 பால் மயக்கு உற்ற ஐயக் கிளவி
தான் அறி பொருள்வயின் பன்மை கூறல்!

24 உருபு என மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்,
இரு வீற்றும் உரித்தே சுட்டும் காலை.

25 தன்மை சுட்டலும் உரித்து என மொழிப,
அன்மைக் கிளவி வேறு இடத்தான.

26 அடை, சினை, முதல், என முறை மூன்றும் மயங்காமை
நடை பெற்று இயலும், வண்ணச் சினைச் சொல்.

27 ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்,
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்,
வழக்கின் ஆகிய உயர் சொல் கிளவி;
இலக்கண மருங்கின் சொல் ஆறு அல்ல.

28 'செலவினும், வரவினும், தரவினும், கொடையினும்,
நிலை பெறத் தோன்றும் அந் நாற் சொல்லும்
தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும்
அம் மூஇடத்தும் உரிய' என்ப.

29 அவற்றுள்,
தருசொல், வருசொல், ஆயிரு கிளவியும்
தன்மை, முன்னிலை, ஆயீரிடத்த.

30 ஏனை இரண்டும் ஏனை இடத்த.

31 யாது, எவன் என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்.

32 அவற்றுள்,
யாது என வரூஉம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்குத்
தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே.

33 இனைத்து என அறிந்த, சினை, முதல்,