கிளவிக்கு
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்.
34 மன்னாப் பொருளும் அன்ன இயற்றே.
35 எப் பொருளாயினும் அல்லது இல் எனின்,
அப் பொருள் அல்லாப் பிறிது பொருள் கூறல்!
36 அப் பொருள் கூறின், சுட்டிக் கூறல்!
37 பொருளொடு புணராச் சுட்டுப் பெயராயினும்,
பொருள் வேறுபடாஅது ஒன்று ஆகும்மே.
38 இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்
வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்,
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்;
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்.
39 முற்படக் கிளத்தல் செய்யுள் உரித்தே.
40 சுட்டு முதல் ஆகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெயர் இயற்கையின் செறியத் தோன்றும்.
41 சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர் கிளவி முற்படக் கிளவார்.
42 ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி,
தொழில் வேறு கிளப்பின், ஒன்று இடன் இலவே.
43 தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி என்று
எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்.
|