சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   129
Zoom In NormalZoom Out


 
44ஒருமை எண்ணின் பொதுப் பிரி பாற்சொல்
ஒருமைக்கு அல்லது எண்ணு முறை நில்லாது.
45வியங்கோள் எண்ணுப்பெயர் திணை விரவு வரையார்.
46வேறு வினைப் பொதுச் சொல் ஒரு வினை கிளவார்.
47எண்ணுங்காலும் அது அதன் மரபே.
48இரட்டைக் கிளவி இரட்டின் பிரிந்து இசையா.
49ஒரு பெயர்ப் பொதுச் சொல் உள் பொருள் ஒழியத்
தெரிபு வேறு கிளத்தல், தலைமையும் பன்மையும்!
உயர்திணை மருங்கினும், அஃறிணை மருங்கினும்.
50பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம்
மயங்கல் கூடா, வழக்கு வழிப்பட்டன.
51பலவயினானும் எண்ணுத் திணை விரவுப் பெயர்
அஃறிணை முடிபின, செய்யுளுள்ளே.
52வினை வேறுபடூஉம் பல பொருள்