அதுவே.
72 காப்பின், ஒப்பின், ஊர்தியின், இழையின்,
ஒப்பின், புகழின், பழியின், என்றா,
பெறலின், இழவின், காதலின், வெகுளியின்,
செறலின், உவத்தலின், கற்பின், என்றா-
அறுத்தலின், குறைத்தலின், தொகுத்தலின், பிரித்தலின்,
நிறுத்தலின், அளவின், எண்ணின், என்றா,
ஆக்கலின், சார்தலின், செலவின், கன்றலின்,
நோக்கலின், அஞ்சலின், சிதைப்பின், என்றா,
அன்ன பிறவும் அம் முதற் பொருள
என்ன கிளவியும் அதன்பால என்மனார் .
73 மூன்றாகுவதே,
ஒடு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி;
வினைமுதல், கருவி, அனை முதற்று அதுவே.
74 அதனின் இயறல், அதன் தகு கிளவி,
அதன் வினைப்படுதல், அதனின் ஆதல்,
அதனின் கோடல், அதனொடு மயங்கல்,
அதனொடு இயைந்த ஒரு வினைக் கிளவி,
அதனொடு இயைந்த வேறு வினைக் கிளவி,
அதனொடு இயைந்த ஒப்பு அல் ஒப்புரை,
இன் ஆன் ஏது, ஈங்கு, என வரூஉம்
அன்ன பிறவும் அதன் பால என்மனார்.
75 நான்காகுவதே,
கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி;
எப் பொருள் ஆயினும் கொள்ளும், அதுவே.
76 அதற்கு வினை உடைமை
|