சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   133
Zoom In NormalZoom Out


யின், அதற்கு உடம்படுதலின்,
அதற்குப் படுபொருளின், அது ஆகு கிளவியின்,
அதற்கு யாப்பு உடைமையின், அதன் பொருட்டு ஆதலின்,
நட்பின், பகையின், காதலின், சிறப்பின், என்று
அப் பொருட் கிளவியும் அதன் பால' என்மனார் .

77 ஐந்தாகுவதே,
`இன்' எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி;
`இதனின் இற்று இது' என்னும், அதுவே.

78 வண்ணம், வடிவே, அளவே, சுவையே,
தண்மை, வெம்மை, அச்சம், என்றா,
நன்மை, தீமை, சிறுமை, பெருமை,
வன்மை, மென்மை, கடுமை, என்றா,
முதுமை, இளமை, சிறத்தல், இழித்தல்,
புதுமை, பழமை, ஆக்கம், என்றா
இன்மை, உடைமை, நாற்றம், தீர்தல்,
பன்மை, சின்மை, பற்றுவிடுதல், என்று,
அன்ன பிறவும் அதன்பால' என்மனார் .

79 ஆறாகுவதே,
அது எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி;
தன்னினும் பிறிதினும், இதனது இது எனும்
அன்ன கிளவிக் கிழமைத்து, அதுவே.

80 இயற்கையின், உடைமையின், முறைமையின், கிழமையின்,
செயற்கையின், முதுமையின், வினையின், என்றா
கரு