சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   135
Zoom In NormalZoom Out


நிலை ஒக்கும் என்மனார் புலவர்

86 கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே.

87 சினைக் கிளவிக்கு 'அது' என் வேற்றுமை
முதற்கண் வரினே, சினைக்கு ஐ வருமே.

88 முதல் முன் ஐ வரின், `கண்' என் வேற்றுமை
சினை முன் வருதல் தெள்ளிது' என்ப.

89 முதலும் சினையும் பொருள் வேறுபடாஅ;
நுவலும் காலை, சொற்குறிப்பினவே.

90 பிண்டப் பெயரும் ஆயியல் திரியா;
பண்டு இயல் மருங்கின் மரீஇய பெயரே.

91 ஒரு வினை ஒடுச் சொல் உயர்பின் வழித்தே.

92 மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய
ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி
நோக்கு ஓரனைய' என்மனார் புலவர்.

93 இரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம், அவ்
இரண்டன் மருங்கின், ஏதுவும் ஆகும்.

94 அது' என் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்,
`அது' என் உருபு கெடக், குகரம் வருமே.

95 தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்
கடி நிலை இலவே, பொருள்வயினான.

96 ஈற்றுப் பெயர் முன்னர் மெய் அறி பனுவலின்,
வேற்றுமை