சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   136
Zoom In NormalZoom Out


தெரிப, உணருமோரே.

97 ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும்
தாம் பிரிவு இலவே, தொகை வரு காலை.

98 ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு
ஏழும் ஆகும், உறை நிலத்தான.

99 குத் தொக வரூஉம் கொடை எதிர் கிளவி
அப் பொருள் ஆறற்கு உரித்தும் ஆகும்

100 அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்
எச்சம் இலவே, பொருள்வயினான

101 அன்ன பிறவும் தொல் நெறி பிழையாது,
உருபினும் பொருளினும் மெய் தடுமாறி,
இரு வயின் நிலையும் வேற்றுமை எல்லாம்
திரிபு இடன் இலவே, தெரியுமோர்க்கே.

102 உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி
ஒரு சொல் நடைய, பொருள் செல் மருங்கே.

103 இறுதியும், இடையும், எல்லா உருபும்,
நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார்.

104 பிறிது பிறிது ஏற்றலும், உருபு தொக வருதலும்,
நெறிபட வழங்கிய வழி மருங்கு' என்ப.

105 ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின்
மெய் உருபு தொகாஅ, இறுதியான.

106 யாதன் உருபின் கூறிற்றுஆயினும்,
பொருள் செல்