சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   138
Zoom In NormalZoom Out


குன்றுவ குன்றும்.

114 முதலின் கூறும் சினை அறி கிளவியும்,
சினையின் கூறும் முதல் அறி கிளவியும்,
பிறந்தவழிக் கூறலும், பண்பு கொள் பெயரும்,
இயன்றது மொழிதலும், இருபெயரொட்டும்,
வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ,
அன்ன மரபினவே ஆகுபெயர்க் கிளவி.

115 அவைதாம்,
தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும்,
ஒப்பு இல் வழியான் பிறிது பொருள் சுட்டலும்,
அப் பண்பினவே, நுவலும் காலை
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும்.

116 அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி
உள' என மொழிப, உணர்ந்திசினோரே.

117 கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும்,
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே!.

118 விளி எனப்படுவது கொள்ளும் பெயரோடு
தெளியத் தோன்றும் இயற்கைய' என்ப.

119 அவ்வே,
'இவ்' என அறிதற்கு மெய் பெறக் கிளப்ப.

120 அவைதாம்,