இ, உ, ஐ, ஓ, என்னும் இறுதி
அப் பால் நான்கே உயர்திணைமருங்கில்
மெய்ப் பொருள் சுட்டிய விள கொள் பெயரே.
121 அவற்றுள்,
இ ஈ ஆகும்; ஐ ஆய் ஆகும்.
122 ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்.
123 உகரம்தானே குற்றியலுகரம்.
124 ஏனை உயிரே உயர்திணை மருங்கின்
தாம் விளி கொள்ளா' என்மனார் புலவர்.
125 அளபெடை மிகூஉம் இகர இறு பெயர்
இயற்கைய ஆகும் செயற்கைய' என்ப.
126 முறைப் பெயர் மருங்கின் ஐ என் இறுதி
ஆவொடு வருதற்கு உரியவும் உளவே.
127 அண்மைச் சொல்லே இயற்கை ஆகும்.
128 ன, ர, ல, ள, என்னும் அந் நான்கு' என்ப,
'புள்ளி இறுதி விளி கொள் பெயரே'.
129 ஏனைப் புள்ளி ஈறு விளி கொள்ளா .
130 அவற்றுள்,
'அன்' என் இறுதி ஆ ஆகும்மே.
131 அண்மைச் சொல்லிற்கு அகரமும் ஆகும்.
132 ஆன்' என் இறுதி இயற்கை ஆகும்.
133 தொழிலின் கூறும் 'ஆன்' என் இறுதி
ஆய் ஆகும்மே, விளிவயினான.
134 பண்பு கொள்
|