பெயரும் அதன் ஓரற்றே.
135 அளபெடைப் பெயரே அளபெடை இயல.
136 முறைப் பெயர்க் கிளவி ஏயொடு வருமே.
137 தான்' என் பெயரும், சுட்டுமுதற்பெயரும்,
`யான்' என் பெயரும், வினாவின் பெயரும்,
அன்றி அனைத்தும் விளி கோள் இலவே .
138 ஆரும் அருவும் ஈரொடு சிவணும்.
139 'தொழிற்பெயர் ஆயின், ஏகாரம் வருதலும்
வழுக்கு இன்று' என்மனார், வயங்கியோரே.
140 பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே.
141 அளபெடைப் பெயரே அளபெடை இயல.
142 சுட்டுமுதற் பெயரே முன் கிளந்தன்ன.
143 நும்மின் திரிபெயர், வினாவின் பெயர், என்று
அம் முறை இரண்டும் அவற்று இயல்பு இயலும்.
144 எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே
நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும்.
145 அயல் நெடிதுஆயின், இயற்கை ஆகும்.
146 வினையினும் பண்பினும்
நினையத் தோன்றும் 'ஆள்' என் இறுதி
ஆய் ஆகும்மே, விளிவயினான.
147 முறைப் பெயர்க் கிளவி
|