சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   143
Zoom In NormalZoom Out


பால் அறிவந்த உயர்திணைப் பெயரே.

163 'ஆண்மை அடுத்த மகன்' என் கிளவியும்,
'பெண்மை அடுத்த மகள்' என் கிளவியும்,
பெண்மை அடுத்த இகர இறுதியும்,
நம்மை ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும்,
முறைமை சுட்டா மகனும் மகளும்,
மாந்தர் மக்கள் என்னும் பெயரும்,
ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும்,
சுட்டு முதல் ஆகிய அன்னும் ஆனும்,
அவை முதல் ஆகிய பெண்டு என் கிளவியும்,
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ,
அப் பதினைந்தும் அவற்று ஓரன்ன.

164 எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்,
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்,
பெண்மை அடுத்த மகன் என் கிளவியும்,
அன்ன இயல' என்மனார் புலவர்.

165 நிலப் பெயர், குடிப் பெயர், குழுவின் பெயரே,
வினைப் பெயர், உடைப் பெயர்,பண்பு கொள் பெயரே,
பல்லோர் குறித்த முறை நிலைப் பெயரே,
பல்லோர் குறித்த சினை நிலைப் பெயரே,
பல்லோர் குறித்த திணை நிலைப் பெயரே,
கூடி வரும் வழக்கின் ஆடு இயற் பெயரே,
இன்றிவர் என்னும் எண்ணியற்பெயரொடு,
அன்றி அனைத்தும் அவற்று இயல்பினவே .