சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   147
Zoom In NormalZoom Out


உயர்திணை மருங்கின், ஆக்கம் இல்லை.

188 நீயிர், நீ' என வரூஉம் கிளவி
பால் தெரிபு இலவே; உடன்மொழிப் பொருள.

189 அவற்றுள்,
`நீ' என் கிளவி ஒருமைக்கு உரித்தே .

190 ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே.

191 ஒருவர்' என்னும் பெயர்நிலைக் கிளவி
இரு பாற்கும் உரித்தே, தெரியும் காலை .

192 தன்மை கட்டின், பன்மை ஏற்கும்.

193 இன்ன பெயரே இவை எனல் வேண்டின்,
முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல்!

194 மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி
மகடூஉ இயற்கை, தொழில்வயினான.

195 ஆ ஓ ஆகும் பெயருமார் உளவே;
ஆயிடன் அறிதல், செய்யுளுள்ளே!

196 இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா;
நிலத்துவழி மருங்கின் தோன்றலான.

197 திணையொடு பழகிய பெயர் அலங்கடையே.