சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   150
Zoom In NormalZoom Out


பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி உயர்திணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே.

216 அ, ஆ, வ என வரூஉம் இறுதி
அப் பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை.

217 ஒன்றன் படர்க்கை த, ற, ட, ஊர்ந்த
குன்றியலுகரத்து இறுதி ஆகும்.

218 பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த
அம் மூ இரண்டும் அஃறிணையவ்வே.

219 அத் திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும்
ஒக்கும் என்ப `எவன் என் வினாவே'.

220 `இன்று, இல, உடைய' என்னும் கிளவியும்,
`அன்று, உடைத்து, அல்ல' என்னும் கிளவியும்,
பண்பு கொள் கிளவியும், `உள' என் கிளவியும்,
பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும்,
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ,
அப் பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும்.

221 பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே.

222 முன்னிலை, வியங்கோள், வினை எஞ்சு கிளவி,
இன்மை செப்பல், `வேறு' என் கிளவி,
`செய்ம்மன, செய்யும், செய்த' என்னும்
அம் முறை நின்ற