சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   152
Zoom In NormalZoom Out


அவற்றுள்,
முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின.

231 அம் முக் கிளவியும் சினை வினை தோன்றின்,
சினையொடு முடியா, முதலொடு முடியினும்,
வினை ஓரனைய என்மனார் புலவர்.

232 ஏனை எச்சம் வினைமுதலானும்,
ஆன் வந்து இயையும் வினைநிலையானும்,
தாம் இயல் மருங்கின் முடியும் என்ப.

233 பல் முறையானும் வினை எஞ்சு கிளவி
சொல் முறை முடியாது அடுக்குந வரினும்,
முன்னது முடிய முடியுமன் பொருளே.

234 நிலனும், பொருளும், காலமும், கருவியும்,
வினைமுதற் கிளவியும், வினையும், உளப்பட
அவ் அறு பொருட்கும் ஓரன்ன உரிமைய,
'செய்யும், செய்த' என்னும் சொல்வே.

235 அவற்றொடு வருவழிச் `செய்யும்' என் கிளவி,
முதற்கண் வரைந்த மூஈற்றும் உரித்தே.

236 பெயர் எஞ்சு கிளவியும் வினை எஞ்சு கிளவியும்,
எதிர் மறுத்து மொழியினும், பொருள் நிலை திரியா.

237 தம்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின்
எச் சொல் ஆயினும், இடைநிலை வரையார்.

238 அவற்றுள்,
`செய்யும்' என்னும் பெயர் எஞ்சு கிளவிக்கு