சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   153
Zoom In NormalZoom Out


மெய்யொடும் கெடுமே, ஈற்றுமிசை உகரம்;
`அவ் இடன் அறிதல்' என்மனார் புலவர்.

239 செய்து என் எச்சத்து இறந்த காலம்,
எய்து இடன் உடைத்தே, வாராக் காலம்.

240 முந் நிலைக் காலமும் தோன்றும் இயற்கை
எம் முறைச் சொல்லும் நிகழும் காலத்து
மெய்ந் நிலை பொதுச் சொல் கிளத்தல் வேண்டும்.

241 வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள' என்மனார் புலவர்.

242 மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி,
அப் பண்பு குறித்த வினைமுதற் கிளவி,
செய்வது இல்வழி, நிகழும் காலத்து
மெய் பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே.

243 இது செயல் வேண்டும் என்னும் கிளவி
இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே-
தன் பாலானும் பிறன் பாலானும்.

244 வன்புற வரூஉம் வினாவுடை வினைச் சொல்
எதிர் மறுத்து உணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே.

245 வாராக் காலத்து வினைச்சொல் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்,
இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை.

246 செயப்படு