அச்சம், பயம் இலி, காலம், பெருமை, என்று
அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே.
255 எச்சம், சிறப்பே, ஐயம், எதிர்மறை,
முற்றே, எண்ணே, தெரிநிலை, ஆக்கம், என்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே.
256 பிரிநிலை, வினாவே, எதிர்மறை, ஒழியிசை,
தெரிநிலைக் கிளவி, சிறப்பொடு தொகைஇ,
இரு மூன்று' என்ப ஓகாரம்மே.
257 தேற்றம், வினாவே, பிரிநிலை, எண்ணே,
ஈற்றசை, இவ் ஐந்து ஏகாரம்மே.
258 வினையே, குறிப்பே, இசையே, பண்பே,
எண்ணே, பெயரொடு, அவ்அறு கிளவியும்
கண்ணிய நிலைத்தே`என' என் கிளவி.
259 என்று என் கிளவியும் அதன் ஓரற்றே.
260 விழைவின் தில்லை தன்னிடத்து இயலும்.
261 தெளிவின் ஏயும், சிறப்பின் ஓவும்,
அளபின் எடுத்த இசைய என்ப.
262 மற்று என் கிளவி வினைமாற்று, அசைநிலை,
அப் பால் இரண்டு' என மொழிமனார் புலவர்.
263 'எற்று' என் கிளவி இறந்த பொருட்டே.
264 'மற்றையது' என்னும் கிளவிதானே
சுட்டு நிலை ஒழிய, இனம் குறித்தன்றே.
265 'மன்ற' என் கிளவி தேற்றம் செய்யும்.
266 தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே.
267 'அந்தில் ஆங்க, அசைநிலைக் கிளவி, என்று
ஆயிரண்டாகும் இயற்கைத்து' என்ப.
268 கொல்லே ஐயம்.
269 எல்லே இலக்கம்.
270 இயற்பெயர்
|