முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்கு உரிஎழுத்தின் வினையொடு முடிமே.
271 அசைநிலைக் கிளவி ஆகுவழி அறிதல்!.
272 'ஏயும் குரையும்-இசைநிறை, அசைநிலை,
ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து’ என்ப.
273 'மா' என் கிளவி வியங்கோள் அசைச்சொல்.
274 'மியா, இக, மோ, மதி, இகும், சின்' என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்.
275 'அவற்றுள்,
இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும்
தகுநிலை உடைய' என்மனார் புலவர்.
276 அம்ம கேட்பிக்கும்.
277 ஆங்க உரையசை.
278 ஒப்பு இல் போலியும் அப் பொருட்டு ஆகும்.
279 'யா, கா,
பிற, பிறக்கு, அரோ, போ, மாது' என வரூஉம்
ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி.
280 'ஆக, ஆகல், என்பது' என்னும்
ஆவயின் மூன்றும் பிரிவு இல் அசைநிலை.
281 'ஈர் அளபு இசைக்கும் இறுதியில் உயிரே
ஆயியல் நிலையும் காலத்தானும்,
அளபெடை நிலையும் காலத்தானும்,
அளபெடை இன்றித் தான் வரும் காலையும்,
உள' என மொழிப 'பொருள் வேறுபடுதல்'
குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும்.
282 நன்று ஈற்று ஏயும், அன்று ஈற்று ஏயும்,
அந்து ஈற்று ஓவும், அன் ஈற்று ஓவும்,
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்.
|