சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 159 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
311 மழவும் குழவும் இளமைப் பொருள. 312 சீர்த்தி மிகு புகழ்; மாலை இயல்பே. 314 கூர்ப்பு கழிவும் உள்ளது சிறக்கும். 315 கதழ்வும் துனைவும் விரைவின் பொருள. 316 அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும். 317
வார்தல், போகல், ஒழுகல் மூன்றும், 318 தீர்தலும் தீர்த்தலும் விடல் பொருட்டு ஆகும். 319 கெடவரல், பண்ணை, ஆயிரண்டும் விளையாட்டு. 320 தடவும் கயவும் நளியும் பெருமை. 321
அவற்றுள், 322 'கய' என் கிளவி மென்மையும் செய்யும். 323 'நளி' என் கிளவி செறிவும் ஆகும். 324 பழுது பயம் இன்றே. 325 சாயல் மென்மை. 326 'முழுது' என் கிளவி எஞ்சாப் பொருட்டே. 327 வம்பு நிலை இன்மை. 328 மாதர் காதல். 329 நம்பும் மேவும் நசை ஆகும்மே. 330
ஒய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், 331 புலம்பே தனிமை. 332 துவன்று நிறைவு ஆகும். 333 முரஞ்சல் முதிர்வே. 334 வெம்மை வேண்டல். 335 பொற்பே பொலிவு. 336 வறிது சிறிது ஆகும். 337 எற்றம் நினைவும் துணிவும் ஆகும். 338 பிணையும் பேணும் பெட்பின் பொருள. 339 பணையே பிழைத்தல்; |