சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   161
Zoom In NormalZoom Out


கவர்வு விருப்பு ஆகும்.

363 சேரே திரட்சி.

364 'வியல்' என் கிளவி அகலப் பொருட்டே.

365 'பேம், நாம், உரும்' என வரூஉம் கிளவி
ஆ முறை மூன்றும் அச்சப் பொருள.

366 வய வலி ஆகும்.

367 வாள் ஒளி ஆகும்.

368 'துய' என் கிளவி அறிவின் திரிபே.

369 உயாவே உயங்கல்.

370 உசாவே சூழ்ச்சி.

371 'வயா' என் கிளவி வேட்கைப் பெருக்கம்.

372 கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள.

373 'நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய' என்ப.

374 நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை.

375 'புனிறு' என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே.

376 நனவே களனும் அகலமும் செய்யும்.

377 மதவே மடனும் வலியும் ஆகும்.

378 மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே.

379 புதிதுபடல் பொருட்டே, யாணர்க் கிளவி.

380 அமர்தல் மேவல்.

381 யாணுக் கவின் ஆம்.

382 பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள.

383 'கடி' என் கிளவி
வரைவே, கூர்மை, காப்பே, புதுமை,
விரைவே, விளக்கம், மிகுதி, சிறப்பே,
அச்சம், முன்தேற்று, ஆயீர் ஐந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே.

384 ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே.

385 ஐ வியப்பு ஆகும்.

386 முனைவு முனிவு ஆகும்.

387 வையே கூர்மை.

388 எறுழ்