வலி ஆகும்.
389 மெய் பிறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்
முன்னும் பின்னும் வருபவை நாடி,
ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல்
தத்தம் மரபின் தோன்றுமன் பொருளே.
390 கூறிய கிளவிப் பொருள் நிலை அல்ல
வேறு பிற தோன்றினும், அவற்றொடு கொளலே!.
391 பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பு இன்றே.
392 பொருட்குத் திரிபு இல்லை, உணர்த்த வல்லின்.
393 உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே.
394 மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.
395 எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண் இயல்பு இன்றே.
396 'அன்ன பிறவும் கிளந்த அல்ல
பன் முறையானும் பரந்தன வரூஉம்
உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட,
இயன்ற மருங்கின் இனைத்து என அறியும்
வரம்பு தமக்கு இன்மையின், வழி நனி கடைப்பிடித்து,
ஓம்படை ஆணையின், கிளந்தவற்று இயலான்,
பாங்குற உணர்தல்' என்மனார் புலவர்.
|