சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   164
Zoom In NormalZoom Out


சுண்ணம் தானே
பட்டாங்கு அமைந்த ஈர் அடி எண் சீர்
ஒட்டு வழி அறிந்து, துணித்தனர் இயற்றல்.

407 அடிமறிச் செய்தி அடி நிலை திரிந்து,
சீர் நிலை திரியாது, தடுமாறும்மே.

408 பொருள் தெரி மருங்கின்
ஈற்று அடி இறு சீர் எருத்துவயின் திரியும்
தோற்றமும் வரையார், அடிமறி யான.

409 மொழிமாற்று இயற்கை
சொல் நிலை மாற்றிப் பொருள் எதிர்இயைய,
முன்னும் பின்னும் கொள்வழிக் கொளாஅல்.

410 'த, ந, நு, எ' என்னும் அவை முதல் ஆகிய
கிளை நுதற் பெயரும் பிரிப்பப் பிரியா.

411 `இசைநிறை, அசைநிலை, பொருளொடு புணர்தல், என்று
அவை மூன்று என்ப ஒரு சொல் அடுக்கே'.

412 `வேற்றுமைத் தொகையே, உவமத் தொகையே,
வினையின் தொகையே, பண்பின் தொகையே,
உம்மைத் தொகையே, அன்மொழித் தொகை என்று,
அவ் ஆறு என்ப தொகைமொழி நிலையே

413 அவற்றுள்,
வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல.

414 உவமத் தொகையே உவம இயல,

415 வினையின் தொகுதி காலத்து இயலும்.