வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின் என்று
அன்ன பிறவும் அதன் குணம் நுதலி,
'இன்னது இது' என வரூஉம் இயற்கை
என்ன கிளவியும் பண்பின் தொகையே.
417 இரு பெயர், பல பெயர், அளவின் பெயரே,
எண்ணியற் பெயரே, நிறைப் பெயர்க் கிளவி,
எண்ணின் பெயரோடு, அவ் வறு கிளவியும்
கண்ணிய நிலைத்தே உம்மைத் தொகையே.
418 பண்பு தொக வரூஉம் கிளவியானும்,
உம்மை தொக்க பெயர்வயினாலும்,
வேற்றுமை தொக்க பெயர் வயினாலும்,
ஈற்று நின்று இயலும் அன்மொழித்தொகையே.
419 'அவைதாம்,
முன்மொழி நிலையலும், பின் மொழி நிலையலும்,
இருமொழி நிலையலும் ஒருங்குடன் நிலையலும்,
அம்மொழி நிலையாது அன் மொழி நிலையலும்,
அந் நான்கு' என்ப 'பொருள்நிலை மரபே.'
420 எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய.
421 'உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே,
பலர்சொல் நடைத்து' என மொழிமனார் புலவர்.
422 வாரா மரபின வரக் கூறுதலும்,
என்னா மரபின் எனக் கூறுதலும்,
அன்னவை எல்லாம்
|