அவற்று அவற்று இயல்பான்,
'இன்ன' என்னும் குறிப்புரை ஆகும்.
423 இசைப் படு பொருளே நான்கு வரம்பு ஆகும்.
424 விரை சொல் அடுக்கே மூன்று வரம்பு ஆகும்.
425 'கண்டீர் என்றா, கேட்டீர் என்றா,
சென்றது என்றா, போயிற்று என்றா,
அன்றி அனைத்தும், வினாவொடு சிவணி,
நின்ற வழி அசைக்கும் கிளவி' என்ப.
426 கேட்டை என்றா, நின்றை என்றா,
காத்தை என்றா, கண்டை என்றா,
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி,
முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே.
427 'இறப்பின், நிகழ்வின், எதிர்வின், என்ற
சிறப்பிடை மரபின் அம்முக் காலமும்,
தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும்
அம் மூவிடத்தான், வினையினும் குறிப்பினும்,
மெய்ம்மையானும் இவ் இரண்டு ஆகும்
அவ் ஆறு' என்ப-'முற்று இயல் மொழியே'.
428 எவ் வயின் வினையும் அவ் வயின் நிலையும்.
429 அவைதாம்,
தத்தம் கிளவி அடுக்குந வரினும்,
எத் திறத்தானும் பெயர் முடிபினவே.
430 பிரிநிலை வினையே, பெயரே, ஒழியிசை,
|