சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   167
Zoom In NormalZoom Out


எதிர்மறை, உம்மை, எனவே, சொல்லே,
குறிப்பே, இசையே, ஆயீர் ஐந்தும்
நெறிப்படத் தோன்றும் எஞ்சு பொருட் கிளவி.

431 அவற்றுள்,
பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின

432 வினை எஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும்
நினையத் தோன்றிய முடிபு ஆகும்மே;
ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே.

433 பெயர் எஞ்சு கிளவி பெயரொடு முடிமே.

434 ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின.

435 எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின.

436 உம்மை எச்சம் இரு ஈற்றானும்
தன்வினை ஒன்றிய முடிபு ஆகும்மே.

437 தன்மேல் செஞ்சொல் வரூஉம் காலை,
நிகழும் காலமொடு வாராக் காலமும்,
இறந்த காலமொடு வாராக் காலமும்,
மயங்குதல் வரையார் முறைநிலையான.

438 'என' என் எச்சம் வினையொடு முடிமே.

439 'எஞ்சிய மூன்றும் மேல் வந்து முடிக்கும்
எஞ்சு பொருட்