சொல் அளவு அல்லது எஞ்சுதல் இன்றே.
442 அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்!
443 மறைக்கும் காலை மரீஇயது ஓராஅல்!
444 'ஈ, தா, கொடு' எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய.
445 அவற்றுள்,
'ஈ' என் கிளவி இழிந்தோன் கூற்றே.
446 'தா' என் கிளவி ஒப்போன் கூற்றே.
447 'கொடு' என் கிளவி உயர்ந்தோன் கூற்றே.
448 'கொடு என் கிளவி படர்க்கை ஆயினும்,
தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பின்
தன்னிடத்து இயலும்' என்மனார் புலவர்.
449 பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும்,
திசைநிலைக் கிளவியின் ஆஅகுநவும்,
தொல் நெறி மொழிவயின் ஆஅகுநவும்,
மெய்ந் நிலை மயக்கின் ஆஅகுநவும்,
மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும்,
அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே.
450 'செய்யாய்' என்னும் முன்னிலை வினைச்சொல்
'செய்' என் கிளவி ஆகு இடன் உடைத்தே.
451 முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந் நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே.
452 கடி சொல் இல்லை, காலத்துப் படினே.
|