குறைச்சொற் கிளவி குறைக்கும் வழிஅறிதல்!
454 குறைந்தன ஆயினும் நிறைப் பெயர் இயல.
455 இடைச் சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே.
456 உரிச் சொல் மருங்கினும் உரியவை உரிய.
457 வினை எஞ்சு கிளவியும் வேறு பல் குறிய.
458 உரையிடத்து இயலும் உடனிலை அறிதல்!.
459 முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே,
இன்ன என்னும் சொல்முறையான.
460 ஒரு பொருள் இரு சொல் பிரிவு இல வரையார்.
461 ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி
பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே.
462 முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே;
ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும்.
463 செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம்
பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
சொல் வரைந்து அறியப் பிரித்தனர் காட்டல்!
|